சியோமி ரெட்மி நோட் 7S

சியோமி ரெட்மி நோட் 7 வரிசையில் அடுத்ததாக ‘ரெட்மி நோட் 7S’ ஸ்மார்ட்போனை இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி நிறுவனம் மே 20 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளது.

48 மெகாபிக்சல் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலாக விளங்க உள்ள இந்த போன் ஃபிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. 4000mAh அளவிலான பெரிய பேட்டரியை இந்த மொபைல் கொண்டிருக்கும்.

சியோமி ரெட்மி நோட் 7S

முன்பாக இந்தியாவில் ரெட்மி நோட் 7 சீரிஸ் போனில் நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ ரக மாடல்கள் விற்பனை செய்யப்படு வருகின்றது. புதிதாக வரவுள்ள ரெட்மீ நோட் 7S மாடலில் 6.3-இன்ச் FHD+ திரை வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன், 19.5:9 என்ற திரை விகிதம் கொண்டிருக்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவன ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் கொண்டு வெளியாகலாம். மேலும், இதில் மிக விரைவான சார்ஜிங் வசதியுடன் கூடியதாக 4000mAh பேட்டரி கொண்டிருக்கும்.

கேமரா பிரிவில் 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என டூயல் கேமரா செட்டப் பெற்று அடுத்தப்படியாக செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 13 மெகாபிக்சல் கேமரா கொண்டதாக இருக்கும்.

மே 20 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ரெட்மி நோட் 7எஸ் மொபைல் தொடர்பான மேலதிக விபரங்கள் அறிமுகத்தின் போது அறிந்து கொள்ளலாம்.