பிரசத்தி பெற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷியோமி நிறுவனம், 48-megapixel கேமரா கொண்ட ஷியோமி நிறுவனத்தின் ரெட்மி ப்ரோ 2 அல்லது ரெட்மி 7 என்ற பெயரில் விற்பனைக்கு ஜனவரி 10ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

ஷியோமி நிறுவனம் தனது ரெட்மி பிராண்டு மாடலை தனியான நிறுவனமாக அறிவிக்க திட்டமிட்டுள்ள நிலையில், வருகின்ற 10ந் தேதி சீனாவில் வெளியிடப்பட உள்ள ரெட்மி பிராண்டிலான மாடல் பெயர் மற்றும் நுட்பம் குறித்து விவரங்கள் பெரிதாக வெளிவராத நிலையில் இந்த மாடலுக்கு ரெட்மி ப்ரோ 2 அல்லது ரெட்மி 7 ப்ரோ என வெளியிடப்படலாம். சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் புதிய ரெட்மி லோகோ இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து , இந்நிறுவன தலைவர் லின் பென் குறிப்பிடுகையில் ரெட்மி மாடல்களை கொண்டு சுதந்திரமாக இயங்கும் தனி நிறுவனமாக செயல்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.

உலகில் முதன்முறையாக 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட மாடலாக வெளியாக உள்ள இந்த மொபைலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸர் சிப்செட் கொண்டிருக்கலாம்.  இந்த கேமரா உடன் செங்குத்தாக எல்இடி ஃபிளாஷ் பெற்றதாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படகின்றது.