ரெட்மி Y3 ஸ்மார்ட்போனில் 32எம்பி செல்பீ கேமராவுடன் வருகை..!

செல்பி பரியர்களின் கவனத்தை பெற சியோமி நிறுவனம் ரெட்மி Y3 ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் கேமரா சென்சாருடன் கூடியதாக விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்த போன் தொடர்பான முதல் டீசர் வீடியோ ஒன்றை சியோமி இந்திய பிரிவு தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரெட்மி Y3 ஸ்மார்ட்போன் சிறப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் சில முக்கிய விபரங்களை தொடர்ந்து இங்கே காணலாம். 6 அங்குல முழு எச்டி டிஸ்பிளே உடன் கூடிய 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டதாக விளங்கலாம்.

மேலும் ஆண்ட்ராய்டு பை இயஙுகுதளத்தை அடிப்படையாக கொண்ட சியோமி ஓஎஸ் மூலம் இயக்கப்படும் இந்த போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்  பொருத்தப்பட்டு 4 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் மெமரி கொண்டிருக்கலாம். கேமரா சார்ந்த செயற்பாட்டில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்துடன் கூடிய  32 மெகாபிக்சல் செல்பீ கேமரா  ற்றும் பிரைமரி ஆப்ஷனில் 12எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி பெற்றதாக கிடைக்கப் பெறலாம்.

25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 3700 மில்லி ஆம்பியர் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி கொண்டதாக ரெட்மி Y3 எதிர்பார்க்கப்படுகின்றது.