jio annual plan rs.2121

ரிலையன்ஸ் ஜியோ புதிய வருடத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட ரூ.2020 வருடாந்திர பிளான் நீக்கப்பட்டு, ரூ.2121 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பிளானின் வேலிடிட்டி 336 நாட்கள் வழங்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

முன்பாக இந்த வருடாந்திர பிளான் ரூ.2199 ஆக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் 2020 வருடப்பிறப்பை முன்னிட்டு 2020 ரூபாயாக குறைக்கப்பட்டது. அறிமுக சலுகையை முடிவுக்கு கொண்டு வந்துள்ள ஜியோ இப்போது ரூ.2121 ஆக அறிவித்துள்ளத. ஆனாலும் போட்டியாளர்களான வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனத்தை விட குறைவாகவே அமைந்திருக்கின்றது. வோடபோன் தனது பயணாளர்களுக்கு ரூ. 2,399 ஆகவும், ஏர்டெல் ரூ.2398 ஆக வழங்குகின்றது.

புதுப்பிக்கப்பட்ட வருடாந்திர பிளானில் ஜியோ வழங்குகின்ற சலுகைககளின் முழுவிபரம் பின் வருமாறு..

டேட்டா – தினமும் 1.5 ஜிபி உயர் வேக டேட்டா

அழைப்புகள் – ஜியோ டூ ஜியோ முற்றிலும் இலவசம் , ஜியோ டூ மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு 12,000 நிமிடங்கள் மட்டும் வழங்கப்படுகின்றது.

எஸ்எம்எஸ் – தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.

336 நாட்கள் செல்லுபடியாகின்ற இந்த திட்டத்தில் கூடுதல் சலுகையாக ஜியோ ஆப் சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கபட்டுள்ளது.

அதேபோல ரூ.329 மற்றும் ரூ.98 திட்டங்கள் Others பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.