மொபைல் போன் விற்பனையில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம்

இந்திய மொபைல் போன் சந்தையில் 38 சதவீத பங்களிப்பை பெற்று ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முதன்மையான மொபைல் போன் தயாரிப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளது. விற்பனையில் ஜியோவின் ஜியோ போன் மொபைல் முக்கிய பங்காற்றுகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ

கவுன்டர்பாயின்ட் (Counterpoint Research) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தியாவின் ஃபீச்சர் போன் மற்றும் ஸ்மார்ட் போன் சந்தையின் மொத்த விற்பனையில் 38 சதவீத பங்களிப்பை பெற்று நாட்டின் முதன்மையான மொபைல் தயாரிப்பாளர் என்ற பெருமையை ஜியோ 4ஜி டெலிகாம் நிறுவனம் கூடுதலாக பெற்றுள்ளது.

மொபைல் போன் விற்பனையில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம்

ஜியோ போன்

2ஜி மொபைல் வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்கு மாற வழிவகுக்கின்ற ஜியோ ஃபீச்சர் ரக மொபைல் போன் மாடலான ஜியோபோன் 2ஜி ஃபீச்சர்  போன் சந்தை மட்டுமல்லாமல் ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனை ஆகின்ற மொபைல்களை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்றது.

குறிப்பாக கடந்த 2018 ஆம் வருடத்தில் மொத்த இந்திய மொபைல் போன் விற்பனையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 38 சதவீதம் பங்களிப்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து பிரபல சீன நிறுவனமான சியோமி 28 சதவீதம் சந்தையைவ பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் நாட்டின் முதன்மையான மொபைல் தயாரிப்பாளராக விளங்கி வந்த சாம்சங் பின்னுக்கு தள்ளப்பட்டு 24 சதவீதம் இந்திய சந்தையை பெற்று விளங்குகின்றது.

உலக ஃபீச்சர் மொபைல் போன் சந்தையில் இந்தியா தொடர்ந்து மிகப்பெரிய விற்பனை மையமாக விளங்குகின்றது. அதனை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகள் உள்ளன. 2018 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்ட 4 ஃபீச்சர் மொபைல்களில் 3 மொபைல்கள் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கவுன்டர்பாயின்ட் அறிக்கை குறிப்பிடுகின்றது.

மொபைல் போன் விற்பனையில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம்

கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் சுமார் 330 மில்லியன் மொபைல் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 11 சதவீத கூடுதல் வளர்ச்சியாகும். மேலும் மொத்த விற்பனையில் 44 சதவீத பங்களிப்பை ஸ்மார்ட்போன்கள் பெற்று விளங்குகின்றது. மற்றொரு முக்கிய விபரமாக மொத்த விற்பனையில் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனங்களான ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் 36 சதவீத மொபைல் விற்பனையை செய்துள்ளது.

4ஜி வழங்குநராக விளங்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 28 கோடிக்கு அதிகமான பயனாளர்களுடன் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் , மொபைல் போன் விற்பனையில் முதலிடத்தை பெற்று அசத்தியுள்ளது.

மொபைல் போன் விற்பனையில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம்