airtel vs jio

அதிகாரப்பூர்வ டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ஏர்டெல் நிறுவனம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

19 ஆண்டுகளில் 30 கோடி பயனாளர்களை இணைத்த ஏர்டெல் நிறுவனம், வோடபோன் ஐடியா இணைப்பிற்கு பிறகு முதலிடத்தை இழந்தது. ஜியோ பயன்பாட்டிற்கு வந்த மூன்று ஆண்டுகளுக்குள் 32.3 கோடி பயனாளர்களை பெற்றுள்ளது.

கடந்த மே 31, 2019 நிலவரப்படி, தனியார் தொலைத் தொடர்பு சேவை  வழங்குநர்களின் சந்தாதாரர்கள் 89.72% சந்தைப் பங்கினை கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல், என இரண்டு பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு 10.28% மட்டுமே ஆகும்.

தொலைத் தொடர்பு சந்தையில் முதன்மையான நிறுவனமாக வோடபோன் ஐடியா விளங்குகின்றது. இந்நிறுவனத்தின் மொத்த சந்தை பங்களிப்பு 33.36 சதவீதமாக உள்ளது. அதே வேளையில், ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் 27.80 சதவீத சந்தையை பெற்றுள்ளது. இதனால் இரண்டாவது இடத்தில் உள்ளது.  பாரதி ஏர்டெல் நிறுவனம் 27.58 சதவீத சந்தையை பெற்றுள்ளது. இறுதியாக, பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு துறையில் 9.98 சதவீத பங்கினை கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ டேட்டா வழங்குவதில் முன்னிலை

வயர்லெஸ் மற்றும் வயர்லைன் சந்தாதாரர்கள் உள்ளிட்ட பிராட்பேண்ட் சேவைகளுக்கான ஒருங்கிணைந்து சேவை வழங்குவதில், ரிலையன்ஸ் ஜியோ 55.54 சதவீத சந்தை பங்கினை பெற்று முன்னிலை வகிக்கின்றது. பாரதி ஏர்டெல் 20.35 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தையும், வோடபோன் ஐடியா 18.75 சதவீதத்தை பெற்றுள்ளது. கடைசியாக, பிஎஸ்என்எல் 3.73 சதவீத டேட்டா சேவையை வழங்குகின்றது.

கம்பிவழி பிராட்பேண்ட் சேவை வழங்குநர்கள் பி.எஸ்.என்.எல் (9.09 மில்லியன்), பாரதி ஏர்டெல் (2.39 மில்லியன்), அட்ரியா கன்வர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் (1.44 மில்லியன்), ஹாத்வே கேபிள் & டேட்டாகாம் (0.83 மில்லியன்) மற்றும் எம்.டி.என்.எல் (0.75 மில்லியன்) பெற்றுள்ளது.