முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோ போன் 3 ஸ்மார்ட்போனை ஆண்ட்ராய்டு ஓஎஸ் இயங்குதளத்தை பின்பற்றி விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்த மொபைல் ஜூன் மாதம் விற்பனைக்கு வரக்கூடும் எதிர்பாரக்கப்படுகின்றது.

ஜியோ நிறுவனம் 4ஜி சேவையின் மூலம் சுமார் 28 கோடிக்கு அதிகமான பயனாளர்களை கொண்டுள்ள நிலையில், இந்நிறுவனம் ஃபீச்சர் ரக 4ஜி மொபைலை ஜியோ போன், ஜியோ போன் 2 என்ற பெயரில் வெளியிட்டு கோடிக்கனக்கான வாடிக்கையாளர்களை இணைத்தது. இந்நிலையில் பட்ஜெட் விலையில் தொடுதிரை அமைப்புடன் கூடிய ஸ்மார்ட்போனை விற்பனைக்கு வெளியிட உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பின்பற்றி அல்லது Kaios இயங்குதளத்தை பெற்று புதிதாக 5 இன்ச் திரை கொண்ட ஜியோ போன் 3 மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிசன்) மாடலாக வரவுள்ளது. இதில் 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் கூடிய ஒரு சிம் கார்டு மற்றும் கூடுதலாக 2ஜி சிம் கார்டுடன் 2ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்டிருக்கலாம். கூடுதலாக சேமிப்பினை அதிகரிக்க மைக்ரோ எஸ்டி அட்டையை வழங்க உள்ளது.

ஜியோபோன் 3 மொபைலில் 5 மெகாபிக்சல் கேமரா மற்றும் செல்ஃபீ படங்களுக்கு 2 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது. இந்த போனில் முன் ஏற்பாடாக ஜியோ நிறுவன செயலிகள் அனைத்தும் வழங்கப்பட்டிருக்கும்.

ஜியோ போன் 3 ஸ்மார்ட்போன் விலை ரூ. 4,500 என நிர்ணயம் செய்யப்படலாம். மேலும் கேஷ்பேக் சலுகை உட்பட கூடுதல் டேட்டா நன்மையை வழங்கலாம்.

வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில் விற்பனைக்கு அறிமுகம் செயப்படலாம். இந்த மொபைல் ஆகஸ்ட் மாதம் முதல் ஆன்லைன் மற்றும் ஆஃபலைன் இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்கும் என beetelbite தளம் குறிப்பிட்டுள்ளது. மேலதிக விபரங்கள் இனி தொடர்ந்து வெளியாகலாம்.