ஏர்டெல் 4ஜி போன் Vs ரிலையன்ஸ் ஜியோபோன் - எது பெஸ்ட் சாய்ஸ்இந்தியாவின் முன்னணி ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் கார்பன் ஏ40 ஸ்மார்ட்போனை ரூ.1399 மதிப்புள்ள ஏர்டெல் 4ஜி போன் Vs இலவச ரிலையன்ஸ் ஜியோபோன் இரண்டையும் ஒப்பீட்டு முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் 4ஜி போன் Vs ரிலையன்ஸ் ஜியோபோன்

ஏர்டெல் 4ஜி போன் Vs ரிலையன்ஸ் ஜியோபோன் - எது பெஸ்ட் சாய்ஸ்

இரண்டு மொபைல் போன்களும் 4ஜி வோல்ட்இ ஆதரவை முக்கிய அம்சமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இரு மொபைல் போன்களும் முதன்முறையாக 4ஜி சேவை மற்றும் ஸ்மார்ட்போன் சார்ந்த செயல்பாடுகளை பெறும் வகையிலான பயனாளர்களுக்கு ஏற்றதாக வெளியிடப்பட்டுள்ளது.

நுட்ப விபரம்

கார்பன் நிறுவனத்துடன் இணைந்து ஏர்டெல் நிறுவனம் ஏ40 ஸ்மார்ட்போனை பன்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 4 அங்குல தொடுதிரையுடன் 800×480 பிக்சல் தீர்மானத்துடன் 1ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படுவதுடன் 8ஜிபி சேமிப்பு கொண்டதாக 32ஜிபி வரையில் நீட்டிக்கும் திறன் மைக்ரோ எஸ்டி அட்டை பெற்றதாக வந்துள்ளது.

மேலும் கேமரா பிரிவில் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் மற்றும் முன்புறத்தில் 0.3 மெகாபிக்சல் சென்சார் பெற்றுள்ளது. இதில் 1400 mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

ஏர்டெல் 4ஜி போன் Vs ரிலையன்ஸ் ஜியோபோன் - எது பெஸ்ட் சாய்ஸ்

ஜியோபோன் 2.4 அங்குல திரையுடன் டி9 கீபோர்டு பெற்றதாக 320×240 பிக்சல் தீர்மானத்துடன் 512 எம்பி ரேம் கொண்டு இயக்கப்படுவதுடன் 4ஜிபி சேமிப்பு கொண்டதாக 32ஜிபி வரையில் நீட்டிக்கும் திறன் மைக்ரோ எஸ்டி அட்டை பெற்றதாக வந்துள்ளது.

மேலும் கேமரா பிரிவில் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் மற்றும் முன்புறத்தில் 0.3 மெகாபிக்சல் சென்சார் பெற்றுள்ளது. இதில் 2000 mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

ஏர்டெல் 4ஜி போன் Vs ரிலையன்ஸ் ஜியோபோன் - எது பெஸ்ட் சாய்ஸ்

இயங்குதளம்

கார்பன் ஏ40 இந்தியன் ஏர்டெல் 4ஜி போன் ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இயங்குதள ஆதரவுடன் கூகுள் ப்ளே ஸ்டோர் வாயிலாக எந்தவொரு செயலிகளையும் பயன்படுத்தலாம்.

ஜியோபோன் கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்பட்டு ஜியோ நிறுவன செயலிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், டிவிட்டர் உட்பட பல்வேறு செயலிகளை பயன்படுத்தும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஏர்டெல் 4ஜி போன் Vs ரிலையன்ஸ் ஜியோபோன் - எது பெஸ்ட் சாய்ஸ்

வசதிகள்

ஏர்டெல் 4ஜி போன் இரு சிம் கார்டு ஆதரவுடன் 2ஜி/3ஜி/4ஜி வோல்ட்இ தொலைத் தொடர்பு சேவைகளை பயன்படுத்த இயலும். ஆனால் ஜியோபோனில் 4ஜி வோல்ட்இ ஜியோ சிம் மட்டுமே பயன்படுத்த இயலும்.

ஜியோபோன் கொண்டு உங்கள் இல்லத்தின் தொலைக்காட்சியை கேபிள் வாயிலாக இணைத்து நேரலையாக டிவி சேவைகளை பெறலாம்.

விலை விபரம்

ஜியோபோன் விலை ரூ.1500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. , ஏர்டெல் 4ஜி கார்பன் மொபைலை விலை ரூ.2899 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு மொபைல்களுக்கும் ஏறக்குறைய ரூ.1399 வரை கூடுலாக விலை அமைந்திருக்கின்றது.

ஏர்டெல் 4ஜி போன் Vs ரிலையன்ஸ் ஜியோபோன் - எது பெஸ்ட் சாய்ஸ்

டேட்டா பிளான்

ஜியோ நிறுவனம் ரூ.153 கட்டணத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்குவதுடன் நாள் ஒன்றுக்கு 500 எம்பி டேட்டா வழங்குகின்றது. தினசரி டேட்டா தீர்ந்த பிறகு 128Kbps வேகத்தில் கிடைக்கப் பெறும்.

ஏர்டெல் 4ஜி போன் Vs ரிலையன்ஸ் ஜியோபோன் - எது பெஸ்ட் சாய்ஸ்

ஏர்டெல் நிறுவனம் ரூ.169 கட்டணத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்குவதுடன் நாள் ஒன்றுக்கு 500 எம்பி 4ஜி/3ஜி டேட்டா வழங்குகின்றது.

ஏர்டெல் 4ஜி போன் Vs ரிலையன்ஸ் ஜியோபோன் - எது பெஸ்ட் சாய்ஸ்

திரும்ப பெறும் வழிமுறை

ஏர்டெல் நிறுவனம் முதற்கட்டமாக ரூ.500 திரும்ப பெறுவதற்கு முதல் 18 மாதங்களில் அதிகபட்சமாக ரூ.3000 வரை ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். அடுத்த கட்டமாக ரூ.1000 பணத்தை திரும்ப பெற அடுத்த 18 மாதங்களில் அதிகபட்சமாக ரூ.3000 வரை ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

ஜியோ நிறுவனம் தொடர்ந்து 36 மாதங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தினால் ரூ.1500 வரை திரும்ப பெறலாம். ஆனால் முதல் 12 மாதங்களுக்குள் மொபைல் போனை திருப்பி கொடுத்தால் எந்த தொகையும் திரும்பி வழங்கப்படாது, 12-24  மாதங்களுக்குள் மொபைலை திரும்பி வழங்கினால் ரூ.500 கட்டணத்தை திரும்ப பெறலாம், 24-36  மாதங்களுக்குள் மொபைலை திரும்பி வழங்கினால் ரூ.1000 கட்டணத்தை திரும்ப பெறலாம், 36  மாதங்களுக்கு பிறகு மொபைலை திரும்பி வழங்கினால் ரூ.1500 கட்டணத்தை திரும்ப பெறலாம். ஜிஎஸ்டி தொகையும் சேர்த்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எது பெஸ்ட் சாய்ஸ்

ஸ்மார்ட்போன் விரும்பிகள் என்றால் ஏர்டெல் கார்பன் ஏ40 ஸ்மார்ட்போன் சிறந்த சாய்ஸ் ஆகும். பீச்சர் ரக பிரியர்களுக்கு ஏற்ற மொபைலாக அமைந்துள்ள ஜியோபோனில் இந்நிறுவனத்தின் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ ம்யூசிக் உள்ளிட்ட சேவைகளை இலவசமாக பெறலாம்.

ஏர்டெல் 4ஜி போன் Vs ரிலையன்ஸ் ஜியோபோன் - எது பெஸ்ட் சாய்ஸ்

பீச்சர் ரகத்தை தவிக்க விரும்பும் பயனாளர்களுக்கு குறைந்த விலையில் மிகவும் சவாலான வசதிகளை வழங்கும் மொபைலாக ஏர்டெல் 4ஜி போன் விளங்குகின்றது. தொடர்ந்து பீச்சர் போனை விரும்புபவர்கள் 4ஜி வோல்ட்இ சேவையை பெற ஏற்றதாக ஜியோ ஃபோன் விளங்குகின்றது.

ஸ்மார்ட்போன் Vs பீச்சர் போன் எது உங்கள் சாய்ஸ் என மறக்காம கருத்தை பதிவு செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here