இந்தியாவில் சாம்சங் மொபைல் தயாரிப்பு நிறுவனம் புதிதாக On சீரிஸ் பிரிவில் சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை ரூ. 16,990 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

ரூ.16,990-க்கு சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ்

முன்னணி சாம்சங் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் ஆன் வரிசை மொபைல்களில் அதிகம் பேசப்படுகின்ற கேலக்ஸி ஆன் மேக்ஸ் மொபைல் ஜூலை 10ந் தேதி இரவு 11.59 மணி முதல் ஃபிளிப்கார்ட் இணையதளத்தின் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

ஆன் வகை மொபைல்களுக்கு உரித்தான டிசைன் அம்சத்தை பெற்று விளங்குகின்ற கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போனில் கருப்பு மற்றும் கோல்டு நிறுத்துடன்  5.7 அங்குல HD சூப்பர் AMOLED திரையுடன் கூடிய மெட்டல் பாடி பெற்றதாக 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பினை கொண்டுள்ளது.

பிராசஸர் & ரேம்

கேலக்ஸி ஆன் மேக்ஸ் மொபைல் போனில் 2.39GHz மீடியாடெக் ஹீலியோ P25 லைட் ஆக்டோ கோர் பிராசஸருடன் கூடிய 4ஜிபி ரேம் பெற்று 32GB உள்ளடங்கிய சேமிப்பை பெற்றதாக வந்திருப்பதுடன் கூடுதலாக சேமிப்பை பெற 256GB திறன் பெற்ற மைக்ரோஎஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

கேமரா

சமூக வலைதளங்களில்வ படங்களை பதிவு செயவதற்கு ஏற்ற வகையில் ஷேர்-ஆன்-தி-கோ வசதியுடன் கூடிய 13MP முன் மற்றும் பின்புற கேமராவை பெற்றுள்ள இந்த மொபைலில் பல்வேறு விதமான மாறுதல் கொண்ட படங்களை பிடிக்கும் வகையிலான வசதிகளுடன் கிடைக்கின்றது.

முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள 13MP செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்பு கேமரா  f/1.9 மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றை பெற்றுள்ளது.

ரூ.16,990-க்கு சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை பின்னணியாக வடிவமைக்கப்பட்ட சாம்சங் டச்விஸ் பெற்றுள்ள ஆன்மேக்ஸ் மொபைலை இயக்க 3300mAh திறன் பெற்ற மின்கலன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மற்றவை

புளூடுத், வைஃபை, ஜிபிஎஸ் மற்றும் 4G LTE உடன் VoLTE HD அழைப்புகள் ஆகியவற்றுடன் இரு கணக்குகளை இயக்கும் வகையிலான வாட்ஸ்ஆப், மெசேஞ்சர் மற்றும் ஃபேஸ்புக் ஆப்களுடன், யூபிஐ மற்றும் பேடிஎம் ஆதரவு பெற்ற சாம்சங் பே மினி போன்ற பயன்தரும் செயலிகளும் இணைக்கப்பட்டுள்ளது.

விலை

வரும் ஜூலை 10ந் தேதி நள்ளிரவு11.59 மணிக்கு ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள சாம்சங் ஆன் மேக்ஸ் மொபைல் போனை ஸ்டான்டர்டு சார்ட்டர்டு கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாயிலாக வாங்கினால் 2000 வரை விலை சலுகை வழங்கப்பட உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.16,990 மட்டுமே..!