தீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ

ஜியோவின் குறைந்த விலை ஃபீச்சர் ரக 4ஜி மொபைலாக விளங்கும் ஜியோபோன் மாடலை தசரா மற்றும் தீபாவளி பண்டிகயை முன்னிட்டு ரூ.699 விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த விற்பனையின் போது உங்களுடைய பழைய ஜியோபோனை வழங்க வேண்டிய அவசியமில்லை.

ரூ.800 சேமிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள ஜியோபோன் தற்பொழுது ரூ.1500 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தீபாவளி 2019 ஆஃபர் மூலம் ஜியோவில் இணையும் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு, ரூ. 700 மதிப்புள்ள ஜியோ டேட்டா ஆனது முதல் 7 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ரீசார்ஜின் போது ஜியோ தானாகவே ரூ.99 மதிப்பு டேட்டாவை வழங்கும் முதல் 7 மாதங்களுக்கு மட்டும் என குறிப்பிட்டுள்ளது.

ஜியோபோன் வசதிகள்

2.4 அங்குல திரையை மட்டுமே கொண்டிருந்தாலும், இந்த மொபைலில் முன்னேற்பாடாக ஜியோ செயலிகளான ஜியோ ம்யூசிக், ஜியோ சினிமா உள்ளிட்ட அனைத்து ஜியோ நிறுவன ஆப்ஸ்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த மொபைல் 512எம்பி ரேம் கொண்டு செயல்பட்டாலும் உள்ளடங்கிய மெமரி 8 ஜி.பி மற்றும் கூடுதலாக 64 ஜி.பி வரை நீட்டிக்க கூடிய  வகையில் மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்தலாம்.

தீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ

முன்புறத்தில் VGA கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு 4 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் அதிகபட்மாக 128ஜிபி வரையிலான நீட்டிக்கும் வகையில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டுள்ள ஜியோஃபோன் மிகவும் சக்திவாய்ந்த 2,000 mAh பேட்டரியை பெற்றுள்ளது.

ஜியோ போன் ரீசார்ஜ் பிளான்

ஜியோ ஃபோன் அறிமுகத்தின்போது வெளியிடப்பட்ட ரூ.153 திட்டம் தற்போது புதுப்பிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் , தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது.

புத்தம் புதிதாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ரூ.49 திட்டத்தில் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் மொத்தமாக 1ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகின்றது. அதாவது ரூ.50 க்கு குறைவான கட்டணத்தில் மாதம் முழுமைக்கும் இலவசமாக வரம்பற்ற அழைப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.