சாம்சங் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் விபரம் வெளியானது

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் , விரைவில் குறைந்த விலையில் மிக சிறந்த வேகத்தில் இயங்கும் வகையிலான ஆண்ட்ராய்டு ஓரியோ கோ எடிசனை பின்பற்றி சாம்சங் SM-J260 என்ற மாடலை தயாரித்து வருவது உறுதியாகியுள்ளது.

சாம்சங் ஆண்ட்ராய்டு கோ எடிஷன்

முதல்முறையாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி மிக இலகு எடை பெற்ற கோ எடிஷன் மாடலை இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருவதாக பெஞ்ச்மார்க் சோதனை வாயிலாக தெரிய வந்துள்ளது.

சாம்சங் SM-J260 என்ற பெயரில் தயாரித்து வரும் மாடலில் 5 அங்குல சூப்பர் AMOLED திரையுடன் , 1.4GHz பிராசெஸர் Exynos 7570 குவாட் கோர் சிப்செட் பெற்றதாக 1ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் வரவுள்ளது. இந்த மொபைல் போனில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்துடன் 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா பெற்று 2,600mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

சாம்சங் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் விபரம் வெளியானது

இந்த மாடல் இந்தியா உட்பட பல்வேறு வளரும் நாடுகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த மொபைல் போன் சாம்சங் கேலக்ஸி J2 கோர் என்ற பெயரில் ரூ.5000 விலையில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் இந்த ஓரியோ கோ எடிஷன் ஸ்மார்ட்போன் வருகை குறித்து அதிகார்வபூர்வ தகவலை சாம்சங் உறதிப்படுத்தவில்லை.