இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் அறிமுக டீசர் வெளியீடு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி F சீரிஸ் அறிமுகத்தை உறுதி செய்யும் வகையில் Full On என்ற பெயரில் தனது முதல் டீசரை வெளியிட்டுள்ளது. முந்தைய கேலக்ஸி M மற்றும் கேலக்ஸி A சீரிஸ் வெற்றியை தொடர்ந்து புதிய F சீரிஸ் வெளியிடப்பட உள்ளது. முதல் மாடல் சாம்சங் கேலக்ஸி F41 என்ற பெயரில் வெளியிடப்படலாம்.

சாம்சங் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள டீசரில் The new #GalaxyF will definitely leave a mark on you. Stay tuned to go #FullOn என குறிப்பிட்டுள்ளது. முன்பே வெளியான சில வதந்திகளின் அடிப்படையில் கேலக்ஸி F41 என்ற பெயரில் முதல் மாடல் அமைந்திருப்பதுடன்,  ரூ.30,000 விலைக்குள் வெளியாகலாம்.

சாம்சங் கேலக்ஸி F41

ஆண்ட்ராய்டு 10 இயங்குதள ஆதரவை பெற்ற Exynos 9611 SoC சிப்செட் உடன் 6 ஜிபி ரேம் பெற்று 1,080 x 2,340 பிக்சல் தீர்மானத்துடன் கூடிய FHD+ எல்சிடி அல்லது AMOLED ஸ்கீரின் பெற்றிருக்கும். முன்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே கொண்டு செல்ஃபி கேமராவுடன், பின்புறத்தில் டிரிப்ள் கேமரா செட்டப் கொண்டிருக்கலாம் என முன்பே வெளியான சில தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.