மடிக்ககூடிய சாம்சங் கேலக்ஸி F ஸ்மார்ட்போன் வீடியோ வெளியானது

ஸ்மார்ட்போன் பரினாம வளர்ச்சியில் அடுத்ததாக வரவுள்ள மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் தொடர்பான கருவியை சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்து வருகின்றது. இந்நிலையில் சாம்சங் F சீரிஸ் என வெளியாக உள்ள மொபைல் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

வருகின்ற பிப்ரவரி 20ந் தேதி சாம்சங் நிறுவனம், வெளியிட காத்திருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 வரிசை மொபைல் வெளீயிட்டு அரங்கில், தனது முதல் மடிக்கூடிய ஸ்மார்ட்போன் தொடர்பான முக்கிய விபரங்களை வெளியிட உள்ளது. இந்நிலையில் செயற்கை நுன்ணறிவு சார்ந்த அம்சத்தை பெற்ற பல்வேறு விபரங்களை இந்த மொபைல் போன் பெற்றிருக்கும்.

லெட்ஸ் கோ டிஜிட்டர் என்ற இணையதளம், சமீபத்தில் சாம்சங் பதிவு செய்த காப்புரிமை வரை படங்களை வெளியிட்டிருந்தது. இதன் வாயிலாக இந்த மொபைல் போனில் ஒரே சமயத்தில் மூன்று விதாமான பயன்பாட்டை மேற்கொள்ள வழி வகுக்கின்றது. இத வருடத்தில் வெளியாக உள்ள மடிக்கும் வகையிலான சாம்சங் F ஸ்மார்ட்போனில் சிறப்பான பிராசெஸருடன் கேமிங் சார்ந்த பயன்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது. இந்த மொபைலில் கேமிங் பட்டன் இடம் பெற்றிருக்கின்றது.

மடிக்ககூடிய சாம்சங் கேலக்ஸி F ஸ்மார்ட்போன் வீடியோ வெளியானது

பட உதவி – letsgodigital

மேலதிக விபரங்கள் பிப்ரவரி 20ந் தேதி சாம்சங் கேலக்ஸி எஸ்10 மொபைலின் அறிமுகத்தின் போது வெளயாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

https://www.youtube.com/watch?v=P86t1F-B5Hs