Samsung : மாதம் ஒரு சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் போன் வெளியிடப்படும்

Samsung Galaxy A Series : இந்தியாவில் சாம்சங் மொபைல் நிறுவனம், புதிய சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் மொபைல் போன்களை மார்ச் மாதம் முதலாவது மாடலை வெளியிட உள்ளது. அனேகமாக சாம்சங் கேலக்ஸி ஏ10 மொபைல் போன் வெளியாகலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ்

சமீபத்தில் சாம்சங் நிறுவனம், மிகப்பெரிய சரிவை இந்தியாவில் சந்தித்து, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், புதிதாக வெளியிட்ட கேலக்ஸி எம் சீரிஸ் அபரிதமான வரவேற்பினை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வெளியாக உள்ள கேலக்ஸி ஏ சீரிஸ் மொபைல்கள் மார்ச் முதல் தொடங்கப்பட்டு ஜூன் வரை மாதம் ஒரு மொபைல் போன் வெளியிடப்படும் என ராய்டரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சாம்சங் தலைமை விளம்பரப்படுத்துதல் தலைவர் ரஞ்சிவிஜித் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சாம்சங் நிறுவனம், 2019 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் சுமார் தோராயமாக ரூ.28,000 கோடி வருவாயை ஈட்ட புதிய மொபைல் போன் கேலக்ஸி ஏ வரிசையின் மூலம் திட்டமிட்டுள்ளது. ரூ.10,000 முதல் ரூ.50,000 வரையிலான விலைக்குள் சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் மொபைல் விலை அமைந்திருக்கும்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் சந்தையாக விளங்கும் இந்தியாவில் சியோமி 28 சதவீத பங்களிப்பையும், சாம்சங் நிறுவனம் 24 சதவீத ஸ்மார்ட்போன் சந்தையை பெற்றுள்ளது. அடுத்து வரவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் வரிசையில் வரவுள்ள கேலக்ஸி ஏ10. ஏ30 மற்றும் ஏ50 போன்கள் மிக சிறப்பான அம்சங்களை கொண்டிருக்கும்.