விரைவில்., சாம்சங் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

பட்ஜெட் விலையில் வரவுள்ள சாம்சங் மொபைல் நிறுவனத்தின் கேலக்ஸி A சீரிஸ் ( Galaxy A series) மாடல்களில் கேலக்ஸி A10, A30 , A50 மாடல்கள் அடங்கிய புகைப்படத்துடன் இணையப்பக்கத்தை சாம்சங் இந்தியா வெளியிட்டுள்ளது.

கேலக்ஸி ஏ10 மொபைல் போனில் இன்ஃபினிட்டி வி டிஸ்பிளேவுடன், ஒற்றை கேமராவும் கேலக்ஸி ஏ50 மாடலில் டிரிபிள் கேமரா சென்சாருடன் இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளேவினை பெற்றதாக காட்சி அளிக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி A சீரிஸ்

குறிப்பாக ஏ சீரிஸ் போன்களின் டாப் மாடலாக வரவுள்ள கேலக்ஸி A50 போனில் ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்லோவ் மோஷன் கேமரா, வைட் ஏங்கிள் லென்ஸ் கேமரா உள்ளிட்ட அம்சங்களை பெற்றிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி A10

கருப்பு, கோல்டு நிறங்களில் கிடைக்க உள்ள சாம்சங் கேலக்ஸி A10 ஸ்மார்ட்போனில் 6.2 அங்குல இன்ஃபினிட்டி வி டிஸ்பிளே பெற்று, 1.6GHz ஆக்டோ-கோர் செயல்படுகின்ற Exynos 7884B சிப்செட்டில் 3 ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாறுபாடினை பெற்றதாக விளங்கலாம்.

கேமரா பிரிவில் 13 எம்பி சென்சாருடன் கூடிய எல்இடி ஃபிளாஷ் மற்றும் செல்ஃபி படங்களுக்கு 5 எம்பி சென்சார் இடம்பெற்றதாக இருக்கும். சாதாரன சார்ஜி அமைப்புடன் கூடிய 4,000mAh பேட்டரி பெற்று டுயல் சிம் கார்டு ஸ்லாட், இரு 4ஜி வோல்ட்இ உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு வெளியான சில தகவல்களின் அடிப்படையில் சாம்சங் கேலக்ஸி ஏ10 விலை ரூ.8490 என தொடங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி A30

சாம்சங் கேலக்ஸி A30 ஸ்மார்ட்போனில் 6.4 அங்குல முழு ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே உடன் சூப்பர் AMOLED பெற்று, 1.8 GHz ஆக்டோ-கோர் செயல்படுகின்ற Exynos 7904 சிப்செட்டில் 3 ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளடக்க மெமரி , 4 ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி என இரு மாறுபாடினை பெற்றதாக விளங்கலாம். கூடுதலாக 512 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி மூலம் நீட்டிக்கலாம்.

கேமரா பிரிவில் டுயல் கேமரா செட்டப் பெற்று 16 எம்பி சென்சாருடன் 5 எம்பி அல்ட்ரா வைட் உடன் கூடிய எல்இடி ஃபிளாஷ் மற்றும் செல்ஃபி படங்களுக்கு 16 எம்பி சென்சார் இடம்பெற்றதாக இருக்கும்.

பின்புறத்தில் கைரேகை சென்சார், சாம்சங் பே மினி, ஏஆர் ஸ்டிக்கர்ஸ் உட்பட 4,000mAh பேட்டரி பெற்று 15W ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்றிக்கும்.

விரைவில்., சாம்சங் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி A50

மூன்று கேமரா வசதியுடன் வரவுள்ள சாம்சங் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போனில் 6.4 அங்குல முழு ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே உடன் சூப்பர் AMOLED பெற்று, 2.3 GHz ஆக்டோ-கோர் செயல்படுகின்ற Exynos 9610 சிப்செட்டில் 4 ஜிபி ரேம் 64 ஜிபி உள்ளடக்க மெமரி , 6 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி என இரு மாறுபாடினை பெற்றதாக விளங்கலாம். கூடுதலாக 512 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி மூலம் நீட்டிக்கலாம். இந்த மொபைலில் கருப்பு, வெள்ளை மற்றும் நீலம் நிறங்களில் கிடைக்கும்.

கேமரா பிரிவில் மூன்று கேமரா செட்டப் பெற்று 25 எம்பி சென்சாருடன்,  5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் உடன் கூடிய எல்இடி ஃபிளாஷ் மற்றும் செல்ஃபி படங்களுக்கு 25 எம்பி சென்சார் இடம்பெற்றதாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ50 போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், சாம்சங் பே மினி, டுயல் மெசஞ்சர் ஏஆர் ஸ்டிக்கர்ஸ் உட்பட 4,000mAh பேட்டரி பெற்று 15W ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்று இரு 4ஜி வோல்ட்இ, கேமரா தொடர்பான பல்வேறு மேம்பட்ட வசதிகளை பெற்றிருக்கும்.

வருகின்ற பிப்ரவரி 28ந் தேதி விற்பனைக்கு வக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற சாம்சங் Galaxy A series போன்களின் விலை ரூ.9000 முதல் தொடங்கலாம் என எதிராபார்க்கப்படுகின்றது. சமீபத்தில் வெளியான கேலக்ஸி எம் சீரிஸ் அமோக ஆதரவை பெற்றுள்ளது. இதுதவிர கேலக்ஸி எம்30 போன் பிப்ரவரி 27ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.