samsung galaxy a01

6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என இரண்டு விதமான மாறுபாட்டில் வந்துள்ள சாம்சங் கேலக்ஸி ஏ01 மொபைல் பட்ஜெட் விலை மாடலாக அடுத்த சில வாரங்களுக்குள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

தற்போது நுட்ப விபரங்கள் மற்றும் படங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விலை மற்றும் கிடைக்கின்ற நாடுகள் குறித்தான தகவல் வெளியாகவில்லை. பட்ஜெட் விலை மாடல் என்பதனால் வளரும் நாடுகளான இந்தியா உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் வெளியிடப்படலாம்.

கேலக்ஸி ஏ 01 மொபைலில் 5.7 இன்ச் டிஸ்ப்ளே எச்டி + திரையுடன் வந்துள்ள வாட்டர் டிராப் இன்ஃபினிட்டி வி வடிவமைப்பை பெற்றதாக வந்துள்ளது. இந்த சாதனம் பிளாஸ்டிக்  பாடியை கொண்டுள்ளது. ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகின்ற செயல்திறன் கோர்கள் 1.95GHz  பெற்றுள்ளது. 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் மாறுபாட்டில் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுக்கு விருப்பம் உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

samsung galaxy a01

இரண்டு நானோ சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு பிரத்யேக ஸ்லாட் பெற்றதாக உள்ளது. இமேஜிங்கிற்காக, கேலக்ஸி ஏ01 மாடலில் இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. பிரதான கேமரா f/ 2.2 துளை கொண்ட 13 மெகாபிக்சல், இரண்டாவது கேமரா f/ 2.4 துளை கொண்ட 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. செல்ஃபிக்களுக்கு, f/ 2.0 துளை கொண்ட 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. கேலக்ஸி A01 ஸ்மார்ட்போன் 3,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது எஃப்எம் ரேடியோவுடன் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கிறது.