இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிதாக சாம்சங் கேக்ஸி ஏ சீரிஸ் மொபைலில் சாம்சங் கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ20, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50 என நான்கு மொபைல்கள் விற்பனைக்கு வரவுள்ளது.

ரூ.8490 ஆரம்ப விலையில் சாம்சங் கேலக்ஸி A10  ஸ்மார்ட்போன் விலை அமைந்திருக்கலாம். பட்ஜெட் ரகத்தில் தற்போது கிடைக்கின் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்களை விட கூடுதல் அம்சத்துடன் அமைந்திருக்கலாம்.

மைஸ்மார்ட் பிரைஸ் இணையதளம் வெளியிட்டுள்ள ஆதாரத்தின் படி, இந்தியாவில் புதிய கேலக்ஸி ஏ வரிசை ஸ்மார்ட்போன்கள் இந்த வருடத்தின் முதல் காலாண்டின் இறுதி வாரங்களில் அதாவது மார்ச் மாத இறுதி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் விற்பனைக்கு ஆன்லைன் மூலம் பிரத்தியேகமாக வெளியிடப்படலாம்.

கேலக்ஸி ஏ வரிசை மொபைல் போன்களில் கேலக்ஸி A10 மாடலில் AMOLED டிஸ்பிளேவை கொண்டதாகவும், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், சாம்சங் Exynos 7885 ஆக்டோ-கோர் பிராசெஸர் பெற்று 2 ஜிபி ரேம் முதல் தொடங்கலாம் என ஜீக்பெஞ்ச் சோதனை மூலம் தெரியவந்துள்ளது. இந்த மொபைல் போன்களில் 4000mAh பேட்டரி பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ30 மொபைல் போனில் சாம்சங் Exynos 7885 ஆக்டோ-கோர் பிராசெஸர் பெற்று 4 ஜிபி ரேம் முதல் தொடங்கலாம் என ஜீக்பெஞ்ச் சோதனை மூலம் தெரியவந்தது.

சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ50 தொடர்பான வெளியான விபரங்களில் மூன்று பிரைமரி கேமரா உடன் பின்புறத்தில் 24 மெகாபிக்சல் சென்சார் இடம்பெற்றிருக்கலாம். இந்த மொபைல் போனை இயக்க Exynos 9610 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி பெற்றிருக்கலாம்.

கேலக்ஸி A சீரிஸ் மொபைல்கள் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பின்பற்றி விற்பனைக்கு வெளியாக உள்ளது.  இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள சாம்சங்கின் கேலக்ஸி எம் வரிசை மொபைல்களுக்கு அமோக ஆதரவு நிலவி வருகின்றது.