பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ10 வெளியானதுஇந்தியாவில் சாம்சங் மொபைல் தயாரிப்பாளரின் கேலக்ஸி ஏ10 (Samsung Galaxy A10) ஸ்மார்ட்போனின் மாடல் ரூபாய் 8490 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் இழந்த சந்தையை மீட்க பல்வேறு வசதிகளை கொண்ட புதிய மாடல்களை பட்ஜெட் விலையில் வெளியிட்டுவ வருகின்றது. அந்த வகையில் கேலக்ஸி எம் வரிசையை தொடர்ந்து புதிய கேலக்ஸி ஏ வரிசை வெளியிடப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போன் சிறப்புகள் மற்றும் வசதிகள்

பிளாஸ்டிக் பாடியை பெற்ற கேலக்ஸி ஏ10 போனில் 6.2 அங்குல இன்ஃபினிட்டி வி டிஸ்பிளேவினை பெற்று HD+  திரையை பெற்றதாக செயல்படுகின்றது. இந்த போனில் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றிய சாம்சங் ஒன் யூஐ பெற்று செயல்படுகின்றது.

பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ10 வெளியானது

இந்த போனை இயக்க சாம்சங் Exynos 7884 ஆக்டோ கோர் சிப்செட் பயன்படுத்தப்பட்டு 2 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பை பெற்றுள்ளது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி அட்டை மூலம் 512 ஜிபி வரை விரிவுப்படுத்தலாம்.

கேமரா பிரிவில் 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் செல்ஃபி உடன் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள 5 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 3400 mAh பேட்டரி பயன்டுத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A10 விலை பட்டியல்

சாம்சங் கேலக்ஸி ஏ10 விலை ரூ.8490 ஆக நிர்ணயஃ செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் மார்ச் 20ந் தேதி முதல் சாம்சங் ஸ்டோர் மற்றும் அனைத்து முன்னணி இ-காமர்ஸ் தளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க – சாம்சங் கேலக்ஸி ஏ50 மொபைல் விலை விபரம்

பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ10 வெளியானது