சாம்சங் நிறுவனம் முன்பே அறிவித்தப்படி இந்தியாவில் தனது கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனினை ரூபாய் 8490 விலையில் ரீடெயிலர்கள் மற்றும் ஆன்லைனில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
பட்ஜெட் ரக விலையில் இந்தியாவில் அறிமுகம் சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் போன்களின் கேலக்ஸி ஏ10 போனில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டதாக 3400mAh பேட்டரி பொருத்தப்பட்டு விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ10-ல் உள்ள முக்கிய அம்சங்கள்
ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்ட ஒன் யூஐ கொண்ட கேலக்ஸி ஏ10 போன் மாடல் 6.2 அங்குல இன்ஃபினிட்டி வி டிஸ்பிளேவினை பெற்று HD+ திரையை பெற்றதாக செயல்படுகின்றது.
சாம்சங் எக்ஸ்னோஸ் 7884 ஆக்டோ கோர் சிப்செட் பயன்படுத்தப்பட்டு இயங்குகின்ற 2 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பை பெற்றுள்ளது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி அட்டை மூலம் 512 ஜிபி வரை விரிவுப்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கேமரா பிரிவில் 13 எம்பி பிரைமரி சென்சார் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடியதாகவும், மற்றும் செல்ஃபி உடன் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள 5 எம்பி சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது. சாம்சங்கின் கேலக்ஸி ஏ10ல் 3400mAh பேட்டரி பயன்டுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக ஏப்ரல் 20-ல் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு கிடைக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது முன்னதாகவே கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அமேசான் உள்ளிட்ட முன்னணி வலைதளங்கள் மற்றும் சாம்சங் ஆகியவற்றில் இதுவரை விற்பனை திறக்கப்படவில்லை.
Samsung Galaxy A10 Specifications
- 6.2-inch (1520 × 720 pixels) HD+ இன்ஃபினிட்டி வி டிஸ்பிளே
- Octa-Core எக்ஸ்னோஸ் 7884 சிப்செட்
- 2GB ரேம், 32GB சேமிப்பு வசதி
- 512GB மைக்ரோ எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 9.0 (Pie)
- இரு சிம் கார்டு
- 13MP கேமரா எல்இடி ஃபிளாஷ், f/1.9
- 5MP கேமரா f/2.0
- ஃபேஸ் அன்லாக்
- அளவுகள்:155.6 x 75.6 x 7.94mm
- 3.5mm ஆடியோ ஜாக்
- Dual 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 5, GPS + GLONASS
- 3,400mAh பேட்டரி