Samsung Galaxy A2 Core

குறைந்த விலையில் 4ஜி வசதி கொண்ட சாம்சங் மொபைல் நிறுவனத்தின் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ எடிசனை பின்பற்றி இயங்கும் அமைப்பை பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது.

சமீபத்தில் இணையத்தில் வெளியிட்ட படங்கள் மற்றும் முன்பே வெளியான தகவலின் அடிப்படையில் கேலக்ஸி ஏ2 கோரின் நுட்ப் விபரங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் சிறப்புகள்

இந்தியாவில் கிடைக்கின்ற சியோமி ரெட்மி கோ மாடலுக்கு போட்டியாக வரவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ2 போனும் ஆண்ட்ராய்டு கோ எடிசனை பின்பற்றி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மொபைல் போன்களின் வழக்கமான டிசைனை பெற்று 5 அங்குல திரை, 540 x 960 பிக்சல் தீர்மானம் பெற்று 16:9 ஆஸ்பெகட்ட் விகிதம் கொண்ட A2 கோரில்  Exynos 7870 SoC கொண்டதாகவும், 1 ஜிபி ரேம் உடன் 8 ஜிபி ஸ்டோரேஜ் பெற்று கேமரா பிரிவில் 8 எம்பி பின்புறத்திலும் , செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என 5 எம்பி சென்சார் வழங்கப்பட்டிருக்கலாம்.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிசன்) அடிப்படையில் செயல்படும் இந்த மொபைல் போனில் 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் வரவுள்ளது. இந்த போனை இயக்க 2,600mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.

samsung-galaxy-a2-core-phone