samsung galaxy a20 price in india

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் அறிமுகம்படுத்தியுள்ள புதிய கேலக்ஸி A20 அடுத்த ஸ்மார்ட்போன் மாடலாக விளங்குகின்றது. முன்பாக கேலக்ஸி A10, கேலக்ஸி A30 மற்றும் கேலக்ஸி A50 மாடல்களை தொடர்ந்து ஏ சீரிஸ் வரிசையில் வெளியிடப்பட்ட அடுத்த மாடலாகும்.

முதன்முறையாக ரஷ்யாவில் வெளியிடப்பட்ட கேலக்ஸி ஏ20 அடிப்படையில் இந்தியாவிலும் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சாம்சங் இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. குறிப்பாக கேலக்ஸி எம் சீரிஸ், பிரிமியம் ரக கேலக்ஸி எஸ்10 ஆகியவற்றுடன் கேலக்ஸி ஏ வரிசை போன்றவை ஆகும்.

4,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகின்ற கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனில் 6.4-அங்குல திரையுடன் (1560 × 720 பிக்சல்ஸ்) HD+ சூப்பர் AMOLED, 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் உள்ள இன்ஃபினிட்டி V டிஸ்பிளே கொண்டதாக அமைந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ20

இந்த போனின் சிப்செட் சார்ந்த அமைப்பில் உள்ள விபரம், ஆக்டோ கோர் எக்ஸ்னோஸ் 7884 சிப்செட் கொண்டு 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ள, இதன் சேமிப்பை அதிகரிக்க 512 ஜிபி வரை திறன் பெற்ற மைக்ரோ எஸ்டி கார்டினை ஆதரவு திறன் கொண்டதாக உள்ளது.

கேலக்ஸி A20 போனில் டூயல் கேமரா செட்டப் பிரைமரி ஆப்ஷனாக உள்ளது. 13 மெகாபிக்சல் சென்சார் ரியர் கேமராவுடன் எல்இடி ஃபிளாஷ், f/1.9 துவாரம், 5 மெகாபிக்சல் கூடுதல் கேமரா f/2.2 துவாரம் உள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகள் மேற்கொள்வதற்கு என 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி செயல்படுகின்ற ஒன் UI உடன் கூடுதல் ஆதரவாக டூயல் 4G வோல்டிஇ, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 5, GPS + GLONASS போன்றவற்றை பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A20 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12,490 (3GB+32GB), இந்தியாவின் முன்னணி ஆன்லைன், ஆஃப்லைன் ஸ்டோர்கள் மற்றும் சாம்சங் இ-காமர்ஸ் மற்றும் சாம்சங் ஒப்ரா ஹவுஸ் ஸ்டோர்களில் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy A20 Specifications in Tamil

  • 6.4-அங்குல (1560 × 720 பிக்சல்ஸ்) HD+ சூப்பர் AMOLED Infinity-V டிஸ்பிளே
  • ஆக்டோ கோர் எக்ஸ்னோஸ் 7884 (Dual 1.6 GHz + Hexa 1.35 GHz) பிராசெஸர்
  • 3GB ரேம், 32GB சேமிப்பு வசதி,
  • 512GB மைக்ரோ எஸ்டி கார்டு
  • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் ஒன் யூஐ
  • இரு சிம் கார்டு
  • 13 மெகாபிக்சல் ரியர் கேமராவுடன் எல்இடி ஃபிளாஷ், f/1.9 துவாரம், 5 மெகாபிக்சல் கூடுதல் கேமரா f/2.2 துவாரம்
  • 8 மெகாபிக்சல் முன்புற கேமரா உடன் f/2.0 துவாரம்
  • கைரேகை சென்சார்
  • அளவுகள் :158.4 x 74.7 x 7.8mm
  • 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
  • டூயல் 4G வோல்டிஇ, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 5, GPS + GLONASS
  • 4,000mAh பேட்டரி

மேலும் தொடர்ந்து சாம்சங் மொபைல் செய்திகள் மற்றும் ஸ்மார்ட்போன் செய்திகள் படிக்கலாம். எங்களுடைய ஃபேஸ்புக் மற்றும் ட்வீட்டர் பக்கங்களில் @gadgetstamilan இணைந்திருங்கள்..,