samsung galaxy a20 price in india

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் ரக பிரிவில் வெளிவந்துள்ள புதிய சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனின் 5  முக்கியமான வசதிகளை பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் காணலாம்.

சாம்சங் நிறுவனம் முன்பாக கேலக்ஸி எம் வரிசை என்ற மொபைல்களை வெளியிட்டிந்தது. அதனை தொடர்ந்து கேலக்ஸி ஏ வரிசையில் கேலக்ஸி A10, கேலக்ஸி A30 மற்றும் கேலக்ஸி A50 மாடல்களை வெளியிட்டுருந்தது.

சாம்சங் கேலக்ஸி ஏ20 மொபைலின் 5 முக்கிய அம்சங்கள்

ரூ. 12000 முதல் ரூ.14,000 விலையில் கிடைக்கின்ற மொபைல்களுக்கு சவாலாக வந்துள்ள இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ20 போனில் டூயல் கேமரா செட்டப், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் 4,000mAh பேட்டரி திறன், 6.4 அங்குல திரை போன்றவை கவனிக்கவேண்டிய அம்சங்களாகும்.

டிஸ்பிளே மற்றும் டிசைன்

இன்ஃபினிட்டி V டிஸ்பிளே தோற்ற அமைப்பினை கொண்டு கருப்பு, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் வந்துள்ள இந்த போனில்  6.4-அங்குல திரையுடன் (1560 × 720 பிக்சல்ஸ்) HD+ சூப்பர் AMOLED, 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டாதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செங்குத்தான நிலையில் பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டு அதன் கீழ் எல்இடி ஃபிளாஷ் மற்றும் கைரேகை சென்சார் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

பிராசெஸர்

தனது சொந்த தயாரிப்பு Exynos சிப்செட் மாடலான ஆக்டோ கோர் எக்ஸ்னோஸ் 7884 சிப்செட் கொண்டு வடிவமைக்கப்பட்டு 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி உள் சேமிப்பு வசதி கொண்டுள்ளது. இதன் சேமிப்பை அதிகரிக்க 512 ஜிபி வரை திறன் பெற்ற மைக்ரோ எஸ்டி கார்டினை ஆதரவு திறன் கொண்டதாக உள்ளது.

கேமரா

கேலக்ஸி A20 போனில் இரட்டை கேமரா செட்டப் பிரைமரி சென்சார் ஆப்ஷனாக உள்ளது. 13 மெகாபிக்சல் சென்சார் ரியர் கேமராவுடன் எல்இடி ஃபிளாஷ் ஆதரவுடன், f/1.9 துவாரம், 5 மெகாபிக்சல் கூடுதல் கேமரா f/2.2 துவாரம் உள்ளது. இளைய தலைமுறையினர் விரும்பும் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகள் மேற்கொள்வதற்கு என 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி & மற்ற வசதிகள்

15 வாட்ஸ் விரைவு சார்ஜிங் வசதியுடன் கூடிய 4000 மில்லி ஆம்பியர் பேட்டரி ஹவர் பேட்டரி கொண்டு கேலக்ஸி ஏ20-யின் மொபைல் இயக்கப்படுக்கின்றது. மேலும் இதில் கூடுதல் ஆதரவுகளாக பையோமெட்ரிக் சார்ந்த பாதுகாப்பு வசதியாக கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்ட ஒன் UI உடன் கூடுதல் வசதிகளாக டூயல் 4G வோல்டிஇ சிம் கார்டு ஆதரவு, ஒய்-ஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5, GPS + GLONASS போன்றவற்றை பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ20 ரேட்

சாம்சங் கேலக்ஸி ஏ20 விலை

இன்று., ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள கேலக்ஸி ஏ20 போனின் விற்பனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் முன்னணி ஃபிளிப்கார்ட், அமைசான் போன்ற ஆன்லைன் வலைதளங்கள், முன்னணி ரீடெயிலர் ஸ்டோர்கள் மற்றும் சாம்சங் இ-காமர்ஸ் ஆன்லைன் வலைதளம் மற்றும் சாம்சங் ஒப்ரா ஹவுஸ் போன்றவற்றில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ20 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி மாடல் விலை ரூ.12,490 ஆக நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

Samsung Galaxy A20 Specifications in Tamil

  • 6.4-அங்குல (1560 × 720 பிக்சல்ஸ்) HD+ சூப்பர் AMOLED Infinity-V டிஸ்பிளே
  • ஆக்டோ கோர் எக்ஸ்னோஸ் 7884 (Dual 1.6 GHz + Hexa 1.35 GHz) பிராசெஸர்
  • 3GB ரேம், 32GB சேமிப்பு வசதி,
  • 512GB மைக்ரோ எஸ்டி கார்டு
  • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் ஒன் யூஐ
  • இரு சிம் கார்டு
  • 13 மெகாபிக்சல் ரியர் கேமராவுடன் எல்இடி ஃபிளாஷ், f/1.9 துவாரம், 5 மெகாபிக்சல் கூடுதல் கேமரா f/2.2 துவாரம்
  • 8 மெகாபிக்சல் முன்புற கேமரா உடன் f/2.0 துவாரம்
  • கைரேகை சென்சார்
  • அளவுகள் :158.4 x 74.7 x 7.8mm
  • 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
  • டூயல் 4G வோல்டிஇ, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 5, GPS + GLONASS
  • 4,000mAh பேட்டரி