samsung galaxy a20 price in india
Samsung Galaxy A20 Price In India

சாம்சங்கின் கேலக்ஸி ஏ வரிசை முறையில் அடுத்ததாக , புதிய கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு ரஷ்யா நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்பே கேலக்ஸி ஏ10, ஏ30 மற்றும் ஏ50 ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு கிடைக்கின்றது.

6.4 அங்குல இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே கொண்ட இந்த போனில், 4,000mAh பேட்டரி பெற்றதாகவும் விளங்கும் கேலக்ஸி A20 முதற்கட்டமாக ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 10ந் தேதி கேலக்ஸி ஏ90 மற்றும் கேலக்ஸி ஏ60 ஆகிய மாடல்கள் விற்பனைக்கு வரக்கூடும்.

சாம்சங்கின் கேலக்ஸி A20 போன் சிறப்புகள்

ரஷ்யாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள கேலக்ஸி ஏ20 போன் RUB 13,990 (தோராயமாக ரூ. 14,900) விலையில் வெளியிட்டுள்ளது. கேலக்ஸி ஏ10 போன் மாடலின் இந்திய விலை ரூ.8,490 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

6.4-அங்குல திரையுடன் (1560 × 720 பிக்சல்ஸ்) HD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்பிளேவை கொண்டதாக விளங்குகின்றது. இந்த போனை இயக்க ஆக்டோ கோர் எக்ஸ்னோஸ் 7884 சிப்செட் கொண்டு 3GB ரேம் உடன் 32GB சேமிப்பு வசதி பெற்றதாக உள்ளது.

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி செயல்படுகின்ற ஒன் யூஐ பெற்றுள்ள கேலக்ஸி A20 போனில் டூயல் கேமரா செட்டப் பிரைமரி ஆப்ஷனாக உள்ளது. 13 மெகாபிக்சல் சென்சார் ரியர் கேமராவுடன் எல்இடி ஃபிளாஷ், f/1.9 துவாரம், 5 மெகாபிக்சல் கூடுதல் கேமரா f/2.2 துவாரம் உள்ளது.

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகள் என பிரத்தியேகமாக 8 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.  டூயல் 4G வோல்டிஇ, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 5, GPS + GLONASS ஆகியவற்றுடன் 4,000mAh பேட்டரி பெற்றதாக உள்ளது.

Samsung Galaxy A20 Specifications

  • 6.4-அங்குல (1560 × 720 பிக்சல்ஸ்) HD+ சூப்பர் AMOLED Infinity-V டிஸ்பிளே
  • ஆக்டோ கோர் எக்ஸ்னோஸ் 7884 (Dual 1.6 GHz + Hexa 1.35 GHz) பிராசெஸர்
  • 3GB ரேம், 32GB சேமிப்பு வசதி,
  • 512GB மைக்ரோ எஸ்டி கார்டு
  • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் ஒன் யூஐ
  • இரு சிம் கார்டு
  • 13MP ரியர் கேமராவுடன் எல்இடி ஃபிளாஷ், f/1.9 துவாரம், 5MP கூடுதல் கேமரா f/2.2 துவாரம்
  • 8MP முன்புற கேமரா உடன் f/2.0 துவாரம்
  • கைரேகை சென்சார்
  • அளவுகள் :158.4 x 74.7 x 7.8mm
  • 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
  • டூயல் 4G வோல்டிஇ, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 5, GPS + GLONASS
  • 4,000mAh பேட்டரி