சாம்சங் கேலக்ஸி ஏ வரிசையில் மற்றொரு மாடலாக சாம்சங் கேலக்ஸி ஏ20இ (Samsung Galaxy A20e) ஸ்மார்டபோன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலானது விற்பனையில் கிடைக்கின்ற சாம்சங் கேலக்ஸி ஏ20 மாடலை விட குறைவான வசதிகளை கொண்டதாகும்.
டூயல் செல்பி கேமரா அம்சத்துடன் கூடிய 13 எம்பி சென்சார் மற்றும் 5 எம்பி சென்சார் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி A20 மொபைல் 6.4 அங்குல திரையை பெற்றிருக்கின்ற நிலையில் ஏ20இ 5.8 அங்குலம் பெற்றுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ20இ சிறப்புகள்
சமீபத்தில் கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ20, கேலக்ஸி ஏ30 மற்றும் புதிய சாம்சங் கேலக்ஸி A70 மற்றும் சாம்சங் கேலக்ஸி A80 போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் ஏ20 இ வெளியாகியுள்ளது.
5.8 அங்குல ஐபிஎஸ் எல்சிடி HD+ திரையை பெற்று (720×1560 பிக்சல்) தீர்மானத்தை கொண்ட இன்ஃபினிட்டி வி டிஸ்பிளேவை கொண்டதாக விளங்குகின்றது. இந்த போனை இயக்க ஆக்டோ கோர் எக்ஸ்னோஸ் 7884 சிப்செட் கொண்டு 3GB ரேம் உடன் 32GB சேமிப்பு வசதி பெற்றதாக உள்ளது.
ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி செயல்படுகின்ற ஒன் யூஐ பெற்றுள்ள கேலக்ஸி A20 போனில் டூயல் கேமரா செட்டப் பிரைமரி ஆப்ஷனாக உள்ளது. 13 மெகாபிக்சல் சென்சார் ரியர் கேமராவுடன் எல்இடி ஃபிளாஷ், f/1.9 துவாரம், 5 மெகாபிக்சல் கூடுதல் கேமரா f/2.2 துவாரம் உள்ளது.
செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகள் என பிரத்தியேகமாக 8 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. டூயல் 4G வோல்டிஇ, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 5, GPS + GLONASS ஆகியவற்றுடன் 3,000mAh பேட்டரி பெற்றதாக உள்ளது.
Samsung Galaxy A20e Specifications
- 5.8- அங்குல (1560 × 720 பிக்சல்ஸ்) HD+ சூப்பர் AMOLED Infinity-V டிஸ்பிளே
- ஆக்டோ கோர் எக்ஸ்னோஸ் 7884 (Dual 1.6 GHz + Hexa 1.35 GHz) பிராசெஸர்
- 3GB ரேம், 32GB சேமிப்பு வசதி,
- 512GB மைக்ரோ எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் ஒன் யூஐ
- இரு சிம் கார்டு
- 13MP ரியர் கேமராவுடன் எல்இடி ஃபிளாஷ், f/1.9 துவாரம், 5MP கூடுதல் கேமரா f/2.2 துவாரம்
- 8MP முன்புற கேமரா உடன் f/2.0 துவாரம்
- கைரேகை சென்சார்
- அளவுகள் :158.4 x 74.7 x 7.8mm
- 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- டூயல் 4G வோல்டிஇ, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 5, GPS + GLONASS
- 3,000mAh பேட்டரி