galaxy a20s

சாம்சங் மொபைல் தயாரிப்பு பிரிவின் புதிய கேலக்ஸி A20s ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ஏ20எஸ் நுட்பவிபரங்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது. இம்முறை குவால்காம் ஸ்னாப்டிராகன்  450 SoC உடன் டிரிப்ள் கேமரா ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.

புதிய சாம்சங் கேலக்ஸி A20s முந்தைய ஏ20 மாடலில் இருந்த சில அம்சங்களை பெற்றிருந்தாலும் முற்றிலும் முக்கிய வசதிளில் மேம்படுத்தப்பட்டுள்ளது. 6.4 இன்ச் எச்டி + டிஎஃப்டி திரையுடன் இன்ஃபினிட்டி வி ஸ்டைல் பெற்றதாகவும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 450 SoC ஆல் இயக்கப்பட்டு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பகத்துடன் மற்றொரு மாறுபாடும் உள்ளது. கூடுதல் சேமிப்பிற்கான மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்டும் கிடைக்கிறது.

A20s மொபைல் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தில் ஒன் பயனர் இடைமுகத்துடன் வந்துள்ளது.  முந்தைய மாடல் இரு கேமரா பெற்றிருந்த நிலையில், பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு கொண்டுள்ளது. 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் 120 டிகிரி மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. செல்ஃபிகள், வீடியோ அழைப்பு மற்றும் ஃபேஸ் அன்லாக்கிற்கு என சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் 8 மெகாபிக்சல் முன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

galaxy a20s mobile

பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர், 15W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரி உள்ளது. இணைப்பு விருப்பங்களில் இரட்டை சிம் கார்டு, VoLTE உடன் 4G LTE, ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டுடன் வருகிறது.

தாய்லாந்தில் வெளியிடப்பட்டுள்ள சாம்சங் கேலக்‌ஸி A20s மாடல் TBH 6,490 (தோராயமாக ரூ. 15,150) ஆகும்.