சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் விலை குறைப்பு., எங்கே வாங்கலாம் ?

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட சாம்சங் நிறுவன கேலக்ஸி ஏ வரிசையில் உள்ள கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ20 மற்றும் கேலக்ஸி ஏ30 என மூன்று மாடல்களின் விலையும் ரூ.500 முதல் ரூ.1500 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆன்லைன் , ஆஃப்லைன் ரீடெயிலர்களிடம் இந்த சிறப்பு சலுகை வழங்கப்படுவிதில்லை. குறிப்பாக இந்த மொபைல் போன்கள் ரெட்மி மற்றும் ரியல்மி நிறுவன மொபைல்களுக்கு சவாலாக விளங்குகின்றது.

சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்டபோன் மாடலுக்கு ரூ.500 வரை விலை குறைக்கப்பட்டு ரூ.7,990 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

கேலக்ஸி ஏ20 ஸ்மார்டபோன் மாடலுக்கு ரூ.1000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.11,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்து கேலக்ஸி ஏ30 ஸ்மார்டபோன் மாடலுக்கு ரூ.1500  விலை குறைக்கப்பட்டு ரூ.15,490 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

இந்த சிறப்பு விலை குறைப்பு சலுகை மே 2 ஆம் தேதி முதல் சாம்சங் நிறுவனத்தின் பிரத்தியேகமான தனது சொந்த ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் மட்டும் வழங்குகின்றது. இந்த சலுகை மற்ற ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆன்லைன் , ஆஃப்லைன் ரீடெயிலர்களிடம் வழங்கப்படுவது கிடையாது.