சாம்சங் கேலக்ஸி ஏ30, கேலக்ஸி ஏ50 மொபைல் அறிமுகம்

இந்தியாவில் வெளியாக உள்ள சாம்சங்கின் கேலக்ஸி ஏ30, மற்றும் கேலக்ஸி ஏ50 மொபைல் போன் நுட்ப விபரங்கள் மற்றும் முக்கிய தகவல்களை சாம்சங் மொபைல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இரு மொபைல் போன்களும் 4,000mAh பேட்டரியுடன் வரவுள்ளது.

கேலக்ஸி ஏ சீரிஸ் மொபைல்களின் ஏ30 மற்றும் ஏ50 மாடல்களில் குறிப்பாக இரு மாடல்களும் 6.4 அங்குல FHD பிளஸ் திரையுடன் இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளேவை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ30

சாம்சங் கேலக்ஸி A30 ஸ்மார்ட்போனில் 6.4 அங்குல FHD பிளஸ் திரையுடன் 1080×2340 பிக்செல்ஸ் தீர்மானத்துடன் சூப்பர் AMOLED பெற்ற இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே கொண்டுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத டுயல் 1.8GHz மற்றும் ஹெக்ஸா 1.6GHz பிராசெஸருடன் 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டு 32 ஜிபி மற்றும் 64 ஜிபி உள்ளடக்க மாறுபாட்டில் வந்துள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டின் மூலம் 512 ஜிபி வரை விரிவுப்படுத்தலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ30 போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,000mAh பேட்டரியை பெற்ற இந்த போனில் டுயல் கேமரா செட்டப் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. நவீனத்துவமான 16MP (F1.7) சென்சார் மற்றும் 5MP (F2.2) சென்சார் கொண்டுள்ளது.

செல்ஃபி மற்றும் வீடியோ படங்களை பெற 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கைரேகை சென்சார், 4ஜி, சாம்சங் பே உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ30, கேலக்ஸி ஏ50 மொபைல் அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி ஏ50

சாம்சங் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,000mAh பேட்டரியை பெற்ற இந்த போனில் டிரிபிள் கேமரா செட்டப் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. நவீனத்துவமான 25MP (F1.7) சென்சார், 5MP (F2.2) சென்சார் ,  மற்றும் 8MP (F2.2) சென்சார் கொண்டுள்ளது.

செல்ஃபி மற்றும் வீடியோ படங்களை பெற 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இன் டிஸ்பிளே கைரேகை சென்சார், 4ஜி, சாம்சங் பே உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.

இரு மாலடல்களும் ஒரே மாதரியான திரை அமைப்பை பெற்றுள்ளது. அதாவது 6.4 அங்குல FHD பிளஸ் திரையுடன் 1080×2340 பிக்செல்ஸ் தீர்மானத்துடன் சூப்பர் AMOLED பெற்ற இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே கொண்டுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத குவாட் 2.3GHz மற்றும் குவாட் 1.7GHz பிராசெஸருடன் 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டு 64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மாறுபாட்டில் வந்துள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டின் மூலம் 512 ஜிபி வரை விரிவுப்படுத்தலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ30, கேலக்ஸி ஏ50 மொபைல் அறிமுகம்

சமீபத்தில் வெளியான கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்கள் அமோக வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து ஏ சீரிஸ் மாடல்கள் மற்றொரு வகையின புதிய நுட்பங்கள் மற்றும் அம்சத்தை கொண்டதாக இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது. பிப்ரவரி 28ந் தேதி அதிகார்வப்பூர்வமாக விலை அறிவிக்கப்படலாம்.