இன்று., சாம்சங் கேலக்ஸி A30, கேலக்ஸி A50, கேலக்ஸி A10 அறிமுகம்

இன்று., சாம்சங் கேலக்ஸி A30, கேலக்ஸி A50, மற்றும் கேலக்ஸி A10 என மூன்று மொபைல்கள் வெளியிடப்பட உள்ளது. இந்தியாவில் பட்ஜெட் ரக மொபைல் சந்தை மீதான கவனத்தை சாம்சங் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்களில் வெளியிடப்பட்ட கேலக்ஸி M10, கேலக்ஸி M20 மற்றும் கேலக்ஸி M30 மொபைல் போன்களை தொடர்ந்து அடுத்தது, இந்தியாவில் முதல்முறையாக கேலக்ஸி ஏ சீரிஸ் ரகத்தில் ஏ10, ஏ30 மற்றும் ஏ50 மொபைல்கள் வெளியிடப்பட உள்ளன.

இன்று., சாம்சங் கேலக்ஸி A30, கேலக்ஸி A50, கேலக்ஸி A10 அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி A30 சிறப்புகள்

இந்த போனின் விலை ரூ. 14,000 க்கு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பே இந்நிறுவனம் நுட்பவிபரங்களை வெளியிட்டிருந்தது. கேலக்ஸி A30 ஸ்மார்ட்போனில் 6.4 அங்குல FHD பிளஸ் திரையுடன் 1080×2340 பிக்செல்ஸ் தீர்மானத்துடன் சூப்பர் AMOLED பெற்ற இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே அமைப்பினை கொண்டதாக இருக்கும். பெயர் குறிப்பிடப்படாத டுயல் 1.8GHz மற்றும் ஹெக்ஸா 1.6GHz பிராசெஸருடன் 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 4 ஜிபி ரேம் கொண்ட மாடலில் 64 ஜிபி உள்ளடக்க மாறுபாட்டில் வந்துள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டின் மூலம் 512 ஜிபி வரை விரிவுப்படுத்தலாம்.

சாம்சங் கேலக்ஸி A30 போனில் மிக விரைவாக சார்ஜிங் செய்ய வசதி வழங்கப்பட்டுள்ளது.  ஃபாஸ்ட் சார்ஜிங் முறையை கொண்ட வசதியுடன் கூடிய 4,000mAh பேட்டரியை பெற்ற இந்த போனில் டுயல் கேமரா செட்டப் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. மிக சிறப்பான படங்களை பெற நவீனத்துவமான 16 மெகாபிக்சல் (F1.7) சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் (F2.2) சென்சார் கொண்டுள்ளது.

செல்ஃபி மற்றும் வீடியோ படங்களை பெற 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. கைரேகை சென்சார், 4ஜி, சாம்சங் பே உள்ளிட்ட வசதிகளை பெற்றதாக இந்த கேலக்ஸி ஏ30 அமைந்துள்ளது.

இன்று., சாம்சங் கேலக்ஸி A30, கேலக்ஸி A50, கேலக்ஸி A10 அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி A50 சிறப்புகள்

ஏ சீரிஸ் வரிசையின் தற்போதைய டாப் மாடலாக காணப்படுகின்ற கேலக்ஸி ஏ50 விலை ரூ.27,000 என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. கேலக்ஸி A50 போனில் , 6.4 அங்குல FHD பிளஸ் திரையுடன் 1080×2340 பிக்செல்ஸ் தீர்மானத்த்துடன் விளங்குகின்ற சூப்பர் AMOLED பெற்ற இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே கொண்டுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத குவாட் கோர் 2.3GHz மற்றும் குவாட் கோர் 1.7GHz பிராசெஸருடன் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட மாடல் 128 ஜிபி உள்ளடக்க மாறுபாட்டில் வந்துள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டின் மூலம் 512 ஜிபி வரை விரிவுப்படுத்தலாம்.

இந்த போனில் மூன்று கேமரா செட்டப் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. நவீனத்துவமான 25 மெகாபிக்சல் (F1.7) சென்சார், 5 மெகாபிக்சல் (F2.2) சென்சார் , மற்றும் 8 மெகாபிக்சல் (F2.2) சென்சார் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போனில் செல்ஃபி மற்றும் வீடியோ படங்களை பெற 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே முறையிலான கைரேகை சென்சார், 4ஜி, சாம்சங் பே உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது.

இன்று., சாம்சங் கேலக்ஸி A30, கேலக்ஸி A50, கேலக்ஸி A10 அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி A10 சிறப்புகள்

மேலே வழங்கப்பட்டுள்ள இரு மாடல்களின் நுட்பவிபரங்களும் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கேலக்ஸி ஏ10 விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. முன்பே வெளிவந்த சில தகவல்களின் அடிப்படையில் நுட்பவிபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி A10 மாடலில் AMOLED டிஸ்பிளேவை கொண்டதாகவும், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், சாம்சங் Exynos 7885 ஆக்டோ-கோர் பிராசெஸர் பெற்று 2 ஜிபி ரேம்  உடன் 16 ஜிபி சேமிப்பு இடம்பெற்றிருக்கலாம். இதிலும்  4000mAh பேட்டரி பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

மேலதிக விபரங்கள் மற்றும் விலை விற்பனை தேதி உள்ளிட்டவை இன்று நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

இன்று., சாம்சங் கேலக்ஸி A30, கேலக்ஸி A50, கேலக்ஸி A10 அறிமுகம்

சமீபத்தில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்30 மொபைல் போனை ரூ.14,990 விலையில் விற்பனைக்கு வெளியிட்டிருந்தது.