16,990 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி ஏ30 விற்பனைக்கு வெளியானது

ரூபாய் 16,990 விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் பெற்றதாக விற்பனைக்கு வந்தள்ளது. கேலக்ஸி ஏ சீரிஸ் வரிசையில் இன்றைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ30 மொபைல் சிறப்புகள் மற்றும் வசதிகள்

கேலக்ஸி ஏ வரிசையில் வந்துள்ள கேலக்ஸி ஏ30 போனில் இரு கேமரா செட்டப், கைரைகை சென்சார் போன்ற வசதிகளை பெற்று ஒரு ரேம் மாறுபாட்டில் கிடைக்கின்றது.

16,990 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி ஏ30 விற்பனைக்கு வெளியானது

கேலக்ஸி A30 ஸ்மார்ட்போனில் 6.4 அங்குல FHD பிளஸ் திரையுடன் 1080×2340 பிக்செல்ஸ் தீர்மானத்துடன் சூப்பர் AMOLED பெற்ற இன்ஃபினிட்டி U டிஸ்பிளே அமைப்பினை கொண்டதாக இருக்கும். மிகவும் நேர்த்தியாக காட்சியளிக்கின்றது.

Exynos 7904 சிப்செட் டுயல் 1.8GHz மற்றும் ஹெக்ஸா 1.6GHz பிராசெஸருடன் 4 ஜிபி ரேம் கொண்ட மாடலில் 64 ஜிபி உள்ளடக்க மாறுபாட்டில் வந்துள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டின் மூலம் 512 ஜிபி வரை விரிவுப்படுத்தலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனில் பிரைமரியாக இரட்டை கேமரா செட்டப் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. மிக சிறப்பான படங்களை பெற நவீனத்துவமான 16 மெகாபிக்சல் (F1.7) சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் (F2.2) சென்சார் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ படங்களை பெற 16 மெகாபிக்சல்ஸ் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A30 போனில் மிக விரைவாக சார்ஜிங் செய்ய வசதி வழங்கப்பட்டுள்ளது.  ஃபாஸ்ட் சார்ஜிங் முறையை கொண்ட வசதியுடன் கூடிய 4,000mAh பேட்டரியை பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி சாம்சங் ஒன் யூஐ கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

16,990 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி ஏ30 விற்பனைக்கு வெளியானது

சாம்சங் கேலக்ஸி ஏ30 விலை பட்டியல்

சாம்சங் கேலக்ஸி ஏ30 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூபாய் 16,990 ஆகும். மார்ச் 2ந் தேதி முதல் சாம்சங் ஸ்டோர் மற்றும் அனைத்து முன்னணி இ-காமர்ஸ் தளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க – சாம்சங் கேலக்ஸி ஏ50 மொபைல் விலை விபரம்