48 எம்பி கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி A31 ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் மொபைல் நிறுவனத்தின் 48 எம்பி கேமரா ஆதரவினை பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள கேலக்ஸி A31 முழு நுட்ப விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அனேகமாக ரூ.15,000 விலைக்குள் விற்பனைக்கு அறிவிக்கப்படலாம்.

கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனில் 6.4 அங்குல FHD+ திரையுடன் சூப்பர் அமோல்ட் 1080×2400 பிக்சல் தீர்மானத்துடன் இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே கொண்டதாக அமைந்துள்ளது. இந்நிறுவனம் இந்த மாடலில் இடம்பெற்றுள்ள சிப்செட் பற்றி எந்த தகவலும் இல்லை. இருந்தாலும் மீடியாடெக் ஹீலியோ P65 சிப்செட் உடன் 4GB / 6GB RAM உடன் 64GB / 128GB என இரு விதமான சேமிப்பை கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக அதிகபட்சமாக நீட்டிக்கப்பட்ட 512 ஜிபி வரை சேமிப்பை கொண்டிருக்கின்றது.

15 வாட்ஸ் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி பெற்ற கேலக்ஸி A31 மாடலில் குவாட் கேமரா செட்டப் பெற்றதாக பிரைமரி ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் உடன் அல்ட்ரா வைட் கேமராவுடன் 8 மெகாபிக்சல், மேக்ரோ சென்சார் 5 மெகாபிக்சல்   மற்றும் டெப்த் சென்சார் 5 மெகாபிக்சல்  ஆகியவற்றை கொண்டுள்ளது. 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உடன் வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தைப் பெற்ற சாம்சங் கேலக்ஸி A31 விலை ரூ.15,000 க்குள் அறிவிக்கப்படலாம்.