சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் படங்கள் மற்றும் விபரம் கசிந்தது

இந்தியாவில் சாம்சங் மொபைல் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ வரிசையில், அடுத்து கேலக்ஸி ஏ40 (Samsung Galaxy A40) தொடர்பான விபரங்கள் ஏற்கனவே வெளிவந்த நிலையில், தற்போது படங்கள் கிடைத்துள்ளது.

மாதம் ஒரு கேலக்ஸி ஏ சீரிஸ் வெளியிப்படும் என முன்பே சாம்சங் குறிப்பிடிருந்த நிலையில், இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A10, கேலக்ஸி A30 மற்றும் கேலக்ஸி A50 மொபைல்கள் வெளிவந்த நிலையில் அடுத்து கேலக்ஸி ஏ40 உட்பட கேலக்ஸி ஏ90 மாடல்கள் ஏப்ரல் 10-ம் தேதி விற்பனைக்கு வெளியாகலாம்.

samsung-galaxy-a40-price-in-india

சாம்சங் கேலக்ஸி ஏ40 போன் நுட்ப விபரங்கள்

சாம்சங் இணையதளத்தின் உதவி பக்கம் அதிகார்வப்பூர்வமாக  SM-A405FN/DS  என்ற குறீயிட்டு பெயருடன் செயற்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் SM-A405FN என்பது கேலக்ஸி ஏ40 மாடலையும், DS’ என்பது டூயல் சிம் கார்டை குறிப்பிடுகின்றது.

சமீபத்தில் வெளியான கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50 மொபைல்கள் இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ள நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ40 மாடலில் அதே 6.4 அங்குல திரையுடன், டூயல் கேமரா செட்டப் பெற்று,  எக்ஸ்னோஸ் 7885 சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  4000mAh பேட்டரி  முதல்முறையாக ஐரோப்பியா சந்தையில் வெளியிடப்பட உள்ள கேலக்ஸி ஏ40 இந்தியாவிலும் விற்பனைக்கு வரக்கூடும்.

samsung-galaxy-a40-price-in-india

கேலக்ஸி ஏ சீரிஸ் விலை பட்டியல்

சாம்சங் கேலக்ஸி ஏ50 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு  கொண்ட மாடல் விலை ரூபாய் 19,990 எனவும், 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு கொண்ட கேலக்ஸி ஏ50 விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ30 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூபாய் 16,990 ஆகும். இரு மொபைல்களும் மார்ச் 2ந் தேதி முதல் சாம்சங் ஸ்டோர் மற்றும் அனைத்து முன்னணி இ-காமர்ஸ் தளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ10 விலை ரூ.8490 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் மார்ச் 20ந் தேதி முதல் சாம்சங் ஸ்டோர் மற்றும் அனைத்து முன்னணி இ-காமர்ஸ் தளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.