19,990 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி ஏ50 விற்பனைக்கு வெளியானது

மூன்று கேமரா பெற்ற மாடலாக சாம்சங் கேலக்ஸி ஏ50 (Samsung Galaxy A50) ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியிடப்படுள்ளது. இந்த மொபைல் போனில் மிக சிறப்பான இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ10 மற்றும் கேலக்ஸி ஏ30 மாடல்களை விட மிக சிறப்பான வசதிகளை பெற்ற மாடலாக கேலக்ஸி ஏ50 மொபைல் போன் விளங்குகின்றது.

சாம்சங் கேலக்ஸி ஏ50 மொபைல் சிறப்புகள் மற்றும் வசதிகள்

19,990 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி ஏ50 விற்பனைக்கு வெளியானது

கேலக்ஸி A50 ஸ்மார்ட்போனில் 6.4 அங்குல FHD பிளஸ் திரையுடன் 1080×2340 பிக்செல்ஸ் தீர்மானத்தை கொண் சூப்பர் AMOLED பெற்ற இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ளது. Exynos 9610 சிப்செட் கூடிய குவாட் கோர் 2.3GHz மற்றும் குவாட் கோர் 1.7GHz பிராசெஸருடன் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட மாடல் 128 ஜிபி உள்ளடக்க மாறுபாட்டில் வந்துள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டின் மூலம் 512 ஜிபி வரை விரிவுப்படுத்தலாம்.

இந்த போனில் மூன்று கேமரா செட்டப் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. நவீனத்துவமான 25 மெகாபிக்சல் (F1.7) சென்சார், 5 மெகாபிக்சல் (F2.2) சென்சார் , மற்றும் 8 மெகாபிக்சல் (F2.2) சென்சார் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போனில் செல்ஃபி மற்றும் வீடியோ படங்களை பெற 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே முறையிலான கைரேகை சென்சார், 4ஜி, சாம்சங் பே உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி வந்துள்ளது.

19,990 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி ஏ50 விற்பனைக்கு வெளியானது

சாம்சங் கேலக்ஸி A50 விலை பட்டியல்

சாம்சங் கேலக்ஸி ஏ50 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு  கொண்ட மாடல் விலை ரூபாய் 19,990 எனவும், 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு கொண்ட கேலக்ஸி ஏ50 விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 2ந் தேதி முதல் சாம்சங் ஸ்டோர் மற்றும் அனைத்து முன்னணி இ-காமர்ஸ் தளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

19,990 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி ஏ50 விற்பனைக்கு வெளியானது