ரூ.1500 விலை குறைக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி A50 சிறப்புகள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற சாம்சங் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போன் விலை ரூ.1500 வரை குறைக்கப்பட்டுள்ளது. 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் என இரண்டிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

முன்பாக சாம்சங் கேலக்ஸி ஏ50 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு  கொண்ட மாடல் விலை ரூபாய் 19,990 எனவும், 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு கொண்ட கேலக்ஸி ஏ50 விலை ரூ.22,990 விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது விலை ரூபாய் 1500 வரை குறைக்கப்பட்ட அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் சாம்சங் இணையதளத்தில் விலை வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A50 சிறப்புகள்

கடந்த பிப்பரவரி மாதம் வெளியான மூன்று கேமரா பெற்ற கேலக்ஸி ஏ50 மொபைல் நுட்பவிபரங்கள் மற்றும் வசதிகளை திரும்ப இங்கே ஒரு முறை அறிந்து கொள்ளலாம்.

6.4 அங்குல FHD பிளஸ் திரையுடன் 1080×2340 பிக்செல்ஸ் தீர்மானத்த்துடன் விளங்குகின்ற சூப்பர் AMOLED பெற்ற இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே கொண்டுள்ளது.  Exynos 9610 சிப்செட் உடன் குவாட் கோர் 2.3GHz மற்றும் குவாட் கோர் 1.7GHz பிராசெஸருடன் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட மாடல் 128 ஜிபி உள்ளடக்க மாறுபாட்டில் வந்துள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டின் மூலம் 512 ஜிபி வரை விரிவுப்படுத்தலாம்.

இந்த போனில் மூன்று கேமரா செட்டப் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. நவீனத்துவமான 25 மெகாபிக்சல் (F1.7) சென்சார், 5 மெகாபிக்சல் (F2.2) சென்சார் , மற்றும் 8 மெகாபிக்சல் (F2.2) சென்சார் கொண்டுள்ளது.

a50 mobile

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை கொண்டு செயல்படுகின்ற சாம்சங் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போனில் செல்ஃபி மற்றும் வீடியோ படங்களை பெற 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே முறையிலான கைரேகை சென்சார், 4ஜி, சாம்சங் பே உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A50 விலை

கேலக்ஸி ஏ50 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு  கொண்ட மாடல் விலை ரூபாய் 18,490

6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு கொண்ட கேலக்ஸி ஏ50 விலை ரூ.21,490