samsung galaxy a51

வியட்நாம் சந்தையில் சாம்சங் நிறுவனம், கேலக்ஸி A51, கேலக்ஸி A71 என இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. முதலில் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் விலை VND 7,990,000 (தோராயமாக ரூ.24,500) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் வியட்நாம் சந்தையில் முன்பதிவு தொடங்கப்பட உள்ள இந்த மாடலுக்க்கான விற்பனை டிசம்பர் 26 முதல் நடைபெற உள்ளது. இந்தியா உட்பட மற்ற நாடுகளில் வெளிவரும் தேதி குறித்து தற்போது எந்த உறுதியான தகவலும் இல்லை.

ஆண்ட்ராய்டு 10.0 இயங்குதளத்தை பின்பற்றி One UI 2.0 கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி A51 மாடலில் 6.5 இன்ச் முழு எச்டி + (1080×2400 பிக்சல்கள்) சூப்பர் AMOLED இன்பினிட்டி-O டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த சாதனத்தை இயக்க ஆக்டா கோர் Exynos 9611 SoC பெற்று 4 ஜிபி ரேம் 64 ஜிபி சேமிப்பு, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி வரை ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு கொண்டதாக உள்ளது.

அடுத்ததாக பிரைமரி கேமரா பிரிவில், குவாட் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டு, முதன்மையான சென்சார் f/ 2.0 லென்ஸுடன் 48 மெகாபிக்சல் வழங்கப்பட்டு, அடுத்து f/ 2.0 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் பெற்று 12 மெகாபிக்சல் செகண்டரி சென்சார், 5 மெகாபிக்சல் சென்சார் ஒரு f/ 2.4 மேக்ரோ லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் f/ 2.2 லென்ஸுடன் உள்ளது.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேக f/2.2 உடன் 32 மெகாபிக்சல் கேமரா கொண்டதாக அமைந்துள்ளது.

samsung galaxy a51 quad camera

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவற்றுடன் சாம்சங் கேலக்ஸி A51 ஸ்மார்ட்போன் மாடலில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் வருகிறது. இது தவிர, 15W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.  இந்த மொபைலில் கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பிங்க் நிறத்தில் கிடைக்க உள்ளது.

மேலும் படிங்க – சாம்சங் கேலக்ஸி ஏ 71 மொபைல் சிறப்புகள்