சாம்சங் கேலக்ஸி ஏ60

சாம்சங் நிறுவனம், கேலக்ஸி ஏ வரிசையில் மற்றொரு ஸ்மார்ட்போன் மாடலாக கேலக்ஸி ஏ60 மொபைலை விற்பனைக்கு சீனாவில் வெளியிட்டுள்ளது. இதுதவிர சாம்சங் கேலக்ஸி A40s மொபைல் போன் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் இன்றைக்கு கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் ரூ.28,990 விலையில் வெளியிட்டுள்ளது. தற்போது சாம்சங்கின் கேலக்ஸி ஏ வரிசையில், கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ20, கேலக்ஸி ஏ30, கேலக்ஸி ஏ40, கேலக்ஸி ஏ50, கேலக்ஸி ஏ60, கேலக்ஸி ஏ70 மற்றும் கேலக்ஸி ஏ80 மாடல்கள் விற்பனைக்கு சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் கிடைக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி ஏ60 விலை மற்றும் சிறப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் விற்பனைக்கு டிரிப்ள் கேமரா செட்டப் கொண்டு 6.3 அங்குல டிஸ்பிளேவில் பஞ்ச் ஹோல் (Infinity-O) அம்சத்தை கொண்டதாக அமைந்துள்ளது. 6 ஜிபி ரேம் ஆப்ஷனை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற இந்த ஸ்மார்ட்போனில் 6.3 அங்குல டிஸ்பிளேவுடன் பஞ்ச் ஹோல் (Infinity-O) அம்சத்தை கொண்டதாகவும் இந்த ஹோல் 4.69mm மட்டும் பெற்று அமைந்துள்ளது. இந்த போனை இயக்க 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டதாக அமைந்துள்ளது.

கேமரா பிரிவில் டிரிப்ள் கேமரா செட்டப் பெற்றதாக பிரைமரி ஆப்ஷனில் 32 எம்பி சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் சென்சார் மற்றும் 5 எம்பி டெப்த் சென்சார் கொண்டதாகவும், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 32 எம்பி சென்சார் பொருத்தப்பட்டிருக்கின்றது. ஆண்ட்ராயடு பை இயங்குதளத்தில் செயல்படுகின்ற இந்த போனை இயக்க 3500mAh பேட்டரி இருக்கின்றது.

சீனாவில் சாம்சங் கேலக்ஸி A60 ஸ்மார்ட்போன் விலை இந்திய மதிப்பின் படி ரூ. 20,700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.