மூன்று கேமராவுடன் வரவுள்ள சாம்சங் புதிய கேலக்ஸி ஏ60 (Samsung Galaxy A60) ஸ்மார்ட்போன் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. கேலக்ஸி A60 போனில் 32 எம்பி செல்ஃபி கேமரா இடம்பெற்றிருக்கும்.
இந்தியாவில் வெளியான கேலக்ஸி ஏ வரிசையில், கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50 மாடல்களை தொடர்ந்து கேலக்ஸி ஏ40, கேலக்ஸி ஏ60 மற்றும் பாப் அப் செல்பி உடன் கேலக்ஸி ஏ90 மாடல்கள் அடுத்தடுத்து விற்பனைக்கு வெளியாக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போனின் சிறப்புகள்
சமீபத்தில் ஸ்லாஷ்லீக் வெளியிட்ட புதிய விபரத்துடன் சிறப்புகள் வெளியாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி A60 போனில் 6.7 அங்குல இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே பெற்று வாட்டர் டிராப் அமைப்பை கொண்டு முழு ஹெச்டி பிளஸ் திரையை சூப்பர் AMOLED அம்சத்தை பெற்றுள்ளது.
கேலக்ஸி ஏ60 போனில் குவால்காம் SM6150 சிப்செட் மாடலுடன் அமைந்துள்ள இந்த போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என இருவித ரேம் மாறுபாட்டில் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டதாக விற்பனைக்கு கிடைக்கலாம்.
கேமரா பிரிவில் எல்இடி ஃபிளாஷ் உடன் 32 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் டெப்த் சென்சார் உடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் சென்சாரை கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 32 மெகாபிக்சல் கேமரா சென்சாரை பெற்றுள்ளது.
இந்த போனில் இன் டிஸ்பிளே கைரேகை சென்சார், அனேகமாக ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட 4,500mAh பேட்டரி இடம்பெற்றிருக்கும். வரும் ஏப்ரல் மாதம் 19ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலதிக விபரங்கள் விற்பனைக்கு வருவதற்கு முன்னதாக வெளியாகலாம். சாம்சங் கேலக்ஸி ஏ60 போன் விலை ரூபாய் 25,000 என நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்ற கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் தொடக்க நிலை கேலக்ஸி A10 மொபைல் போன் 2 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பை பெற்று 8,490 ரூபாய்க்கும், சாம்சங்கின் கேலக்ஸி A30 மொபைல் மாடல் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பை பெற்று 16,990 ரூபாய்க்கும், கேலக்ஸி A50 மொபைல் போனில் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பை பெற்று 19,990 மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பை பெற்று 22,990 விலையில் கிடைக்கின்றது.