சாம்சங் கேலக்ஸி A80

சுழலும் கேமராவை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ80 மீதான ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில் கேலக்ஸி ஏ80 விலை ரூபாய் 45,000 முதல் ரூ.50,000 விலையிலும், கேலக்ஸி ஏ70 மொபைல் விலை ரூபாய் 25,000 முதல் ரூ.30,000 விலைக்குள் அமையும் என உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கேலக்ஸி ஏ70 அடுத்த வாரமும், கேலக்ஸி A80 ஸ்மார்ட்போன் மே மாதமும் விற்பனைக்கு வெளியாகக்கூடும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட சுழலும் கேமரா கொண்ட் கேலக்ஸி ஏ80 போனில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்கள், பிரைமரி சென்சார் என மூன்று விதமான பயன்பாட்டினை மேற்கொள்ள ஒரே டிரிப்ள் கேமரா சென்சார் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி ஏ80 விலை விபரம்

செல்ஃபி கேமராவை இயக்கினால் ஸ்லைடிங் முறையில் மேல் எழும்பி சுழன்று பிரைமரி சென்சார் கேமராவே செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 3D டெப்த் ToF சென்சார் இடம்பெற்றுள்ளது.

6.7 அங்குல சூப்பர் AMOLED திரையை பெற்ற கேலக்ஸி A80 போனில் 1,080 x 2,400 பிக்சல் தீர்மானத்துடன் வந்துள்ள இந்த போனை இயக்க குவால்காம் நிறுவனத்தின் புதிய ஏஐ சிப்செட் மாடலான ஸ்னாப்டிராகன் 730G பிராசெஸர் உடன் கூடிய 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்டுள்ளது. 25W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் கூடிய 3700mAh திறன் பெற்ற பேட்டரி இந்த போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வருகின்ற மே மாதம் விற்பனைக்கு வெளியாக உள்ள கேலக்ஸி ஏ80 விலை ரூ.45,000 முதல் ரூ.50,000 வரையில் அமைந்திருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ80, கேலக்ஸி ஏ70 விலை மற்றும் அறிமுக விபரம்

சாம்சங் கேலக்ஸி ஏ70 விலை விபரம்

அடுத்ததாக டிரிப்ள் கேமரா செட்டப் பெற்ற கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனில் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் கூடிய 4,500 மில்லி ஆம்பியர் கொண்டதாக கிடைக்கின்றது. இந்தியாவில் அடுத்த வாரத்தில் விற்பனைக்கு வரவுள்ள ஏ70 போனின் விலை ரூ.25,000 முதல் ரூ.30,000 விலைக்குள் அமைந்திருக்கும்.

6.7 அங்குல முழு ஹெச்டி பிளஸ் திரையுடன் கொண்டு 1080×2400 பிக்சல் சூப்பர் AMOLED உடன் கூடிய இன்ஃபினிட்டி யூ அம்சம் வழங்கப்பட்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் பெற்றதாக உள்ள இந்த போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் உடன் உள் சேமிப்பு 128 ஜிபி சேமிப்பை பெற்றிருக்கும்.

கேலக்ஸி A70 போனில் 32  மெகாபிக்சல் சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் மற்றும் டெப்த் சென்சார் பிரிவில் 5 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது. செஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 32 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ80, கேலக்ஸி ஏ70 விலை மற்றும் அறிமுக விபரம்

2 மில்லியன் விற்பனை சாதனை

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ வரிசை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 40 நாட்களில் சுமார் 20 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் சாம்சங் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைமை அதிகாரி ரஞ்சிவிஜித் சிங் கூறுகையில்,  மெட்ரோ நகரங்கள் முதல் சிறிய நகரங்களிலும் கூட கேலக்ஸி A50, A30 மற்றும் A10 மாடல்களுக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளனர். எனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 40 நாட்களில் 2 மில்லியன் விற்பனை எண்ணிக்கையை கடந்த $ 500 மில்லியன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க – கேலக்ஸி ஏ2 கோர் மொபைல் விலை ரூ.5,290

Samsung-Gaalxy-A70