சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் விபரம் வெளியானதுசாம்சங்கின் கேலக்ஸி ஏ வரிசை மொபைல்களில் தொடர்ந்து, புதிய சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா செட்டப், 4,500mAh பேட்டரி கொண்டதாக விளங்குகின்றது. விலை விபரம் மற்றும் விற்பனை தேதி வெளியாகவில்லை.

இந்தியாவில் முன்பாக கேலக்ஸி A10 , A30, A50 மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் ரஷ்யாவில் கேலக்ஸி A20 வெளியானது. வரும் ஏப்ரல் 10ந் தேதி விற்பனைக்கு மூன்று கேலக்ஸி ஏ வரிசை மாடல்கள் வெளியாகலாம் என கருதப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன்

வாட்டர் டிராப் டிஸ்பிளே, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்களை கொண்ட 6.7 இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி -யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.1,080 x 2,400 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் கொண்டதாக உள்ளது.

கேலக்ஸி A70 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 670  சிப்செட், உடன் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் பெற்ற 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டதாக விளங்கும், கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டினை இணைத்துக் கொள்ளலாம்.

Samsung-Gaalxy-A70

கேமரா பிரிவில் , 32எம்பி பிரைமரி சென்சார் கேமரா, 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா சென்சார், 5எம்பி டெப்த் கேமரா என மூன்று கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளன. வீடியோ அழைப்பு மற்றும் செல்பீ படங்களுக்கு என 32 மெகாபிக்சல்ஸ் கேமரா இடம்பெற்றுள்ளது.

4500mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனில் முதன்முறையாக இந்நிறுவனத்தின் அதிகபட்ச திறன் 25W பெற்ற ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 10ம் தேதி அதிகார்வப்பூர்வமாக விலை அறிவிக்கப்படலாம்.