Samsung-Gaalxy-A70

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் அடுத்த கேலக்ஸி ஏ வரிசையில், புதிதாக சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனினை ரூ.28,990 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முன்பாக இந்தியாவில் கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ20, கேலக்ஸி ஏ10, மற்றும் கேலக்ஸி ஏ50 மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட கேலக்ஸி ஏ 70 தற்போது இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. மே மாதம் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் சுழலும் கேமரா வசதியுடன் விற்பனைக்கு வரவுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ70 விலை மற்றும் சிறப்புகள்

வரும் ஏப்ரல் 20ந் தேதி முதல் ஏப்ரல் 30ந் தேதி வரை முன்பதிவு நடைபெற உள்ள கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் மே மாதம் 1 ஆம் தேதி முதல் ஃபிளிப்கார்ட் மற்றும் சாம்சங் இ-ஷாப் உட்பட முன்னணி ரீடெயிலர்கள, சாம்சங் ஒப்ரா ஹவுஸ் போன்றவற்றில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. முன்பதிவு செய்து மே 1 ஆம் தேதி வாங்குபவர்களுக்கு சாம்சங் யூ பிளக்ஸ் ப்ளூடூத் கருவி ரூ.999 விலையில் வாங்கலாம், பொதுவாக இந்த கருவி ரூ.3,799 விலையில் கிடைக்கின்றது.

6.7 அங்குல முழு ஹெச்டி பிளஸ் திரையுடன் 1080×2400 பிக்சல் சூப்பர் AMOLED உடன் கூடிய இன்ஃபினிட்டி யூ அம்சம் வழங்கப்பட்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் பெற்றதாக உள்ள இந்த போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் உடன் உள் சேமிப்பு 128 ஜிபி அம்சத்தை கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி அட்டை வாயிலாக 512 ஜிபி வரை நீட்டிக்க இயலும். ஆனால் இந்தியாவில் 6 ஜிபி ரேம் கொண்டதாக மட்டும் கிடைக்கின்றது.

மூன்று கேமரா ஆப்ஷனை கொண்ட கேலக்ஸி ஏ70 போனில் 32 எம்பி சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் மற்றும் டெப்த் சென்சார் பிரிவில் 5 எம்பி சென்சார் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 32 எம்பி கேமரா சென்சார் உள்ளது. இரட்டை சிம் கார்டு ,வை-ஃபை,25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் கூடிய 4,500mAh பேட்டரி கொண்டிருக்கின்றது.

ரூ.28,990 விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் அறிமுகமானது

Samsung Galaxy A70 specifications

  • 6.7 அங்குலம் (2400 x 1080 பிக்சல்) முழு HD+ 20: 9 New Infinity-U Super AMOLED display
  • Octa Core (2.2GHz Dual + 1.8GHz Hexa) ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸர்
  • 6GB Ram, 8GB RAM, 128GB சேமிப்பு வசதி
  • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் சாம்சங்  One UI
  • இரட்டை சிம்
  • 32MP கேமரா சென்சார், f/1.7, PDAF; Secondary: 8MP சென்சார், f/2.2, 12mm ultra-wide, டெப்த் சென்சார் 5Mp f/2.2; LED flash
  • 32 எம்பி செல்ஃபி சென்சார்
  • இன்-டிஸ்பிளே கைரேகை செனசார்
  • அளவுகள்: 165.2 x 76.5 x 9.3mm
  • Dual 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), Bluetooth 5, GPS + GLONASS, USB Type-C
  • 4500mAh பேட்டரி உடன் 25W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்