சாம்சங் கேலக்ஸி A70s

இன்றைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி A70s ஸ்மார்ட்போன் சிறப்புகள் மற்றும் விலை விபரத்தை கேட்ஜெட்ஸ் தமிழன் யூடியூப் சேனலில் அறிந்து கொள்ளலாம். சாம்சங் கேலக்ஸி A70s ஸ்மோர்ட்போனில் குறிப்பிடதக்க அம்சங்களாக 64 எம்பி கேமரா கொண்ட சாம்சங்கின் முதல் ஸ்மார்ட் போன் மாடலாகும். இதில் பின்புறத்தில் டிரிப்ள் கேமரா ஆப்ஷன் கொண்டுள்ளது.

சாம்சங்கின் சமீபத்திய கேலக்ஸி ஏ70s ஸ்மார்ட்போன் 20: 9 விகிதத்துடன் பெரிய 6.7 இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. முழு HD + உடன் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 6 ஜிபி ரேம் அல்லது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டரனல் மெமரி கொண்டுள்ளது.

அடுத்து நாம் காண இருப்பது கேமரா விபரங்கள் பிரைமரி கேமராவில் டிரிப்ள் ஆப்ஷனை பெற்றுள்ளது. அதில் 64 MP சென்சார், 8MP அல்ட்ரா வைட் ஏங்கிள் கேமரா சென்சார் மற்றும் 5 MP  டெப்த் சென்சார் பெற்றுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் அழைப்புகளுக்கு ஏற்ப 32 எம்பி கேமரா  வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தில் பை ஆதரவை பெற்றதாக கொண்ட ஒன் UI பெற்றுள்ளது. மேலும், இந்த மொபைலை பொருத்தவரை 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜருடன் 4500mAh பேட்டரி பெற்றுள்ளது. 4ஜி வோல்டிஇ, இன் டிஸ்பிளே கைரேகை சென்சாரை இந்த மாடல் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A70s

இந்த போனில் சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை என மூன்று நிறங்களுடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி A70s தொடக்க மாடலின் விலை ரூ .28,999. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் மாடல் ரூ .30,999 க்கு விற்பனையாகும். இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 28 முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சாம்சங் ஓபரா ஹவுஸ் மற்றும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் ஆகியவற்றில் கிடைக்கும்.