சாம்சங் கேலக்ஸி A71

சாம்சங்கின் கேலக்ஸி ஏ51 மொபைலை தொடர்ந்து கேலக்ஸி A71 ஸ்மார்ட்போன் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டு குவாட் கேமரா செட்டப் பெற்று 64 மெகாபிக்சல் கேமரா முதன்மையான சென்சாராக வழங்கப்பட்டுள்ளது.

புதிய மாடலாக வெளியிடப்பட்டுள்ள கேலக்ஸி ஏ71 மொபைலின் விலை விபரம் அறிவிக்கப்படவில்லை. இந்தியா வருகை குறித்தான எந்த தகவலும் தற்போது வெளியாகவில்லை.

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் இயங்குதளத்தை பின்பற்றி செயல்படுகின்ற 6.7 அங்குல முழு எச்டி + சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-O டிஸ்பிளே அமைப்பினை கொண்டு 2400 × 1080 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டதாக செயல்படுகின்றது. 6 ஜிபி ரேம் மற்றும்  8 ஜிபி ரேம் என இரு மாறுபட்ட விருப்பங்களை பெற்று இரண்டிலும் 128 ஜிபி சேமிப்பு கொண்டுள்ளது.

குவால்காம் நிறுவனத்தின் மிக சிறப்பான ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 730 மொபைல் சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்றது. அடுத்ததாக பிரைமரி கேமரா பிரிவில், குவாட் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டு, முதன்மையான சென்சார் f/ 1.8 லென்ஸுடன் 64 மெகாபிக்சல் வழங்கப்பட்டு, அடுத்து f/ 2.2 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் பெற்று 12 மெகாபிக்சல் செகண்டரி சென்சார், 5 மெகாபிக்சல் சென்சார் ஒரு f/ 2.4 மேக்ரோ லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் f/ 2.2 லென்ஸுடன் உள்ளது.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேக f/2.2 உடன் 32 மெகாபிக்சல் கேமரா கொண்டதாக அமைந்துள்ளது.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவற்றுடன் சாம்சங் கேலக்ஸி A71 ஸ்மார்ட்போன் மாடலில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் வருகிறது. இது தவிர, 25W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.  இந்த மொபைலில் கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பிங்க் நிறத்தில் கிடைக்க உள்ளது.

மேலும் படிங்க – சாம்சங் கேலக்ஸி ஏ 51 மொபைல் சிறப்புகள்