செல்ஃபி ரசிகர்களுக்கு சாம்சங் கேலக்ஸி A8+ (2018) மொபைல் வெளியானதுசாம்சங் இந்தியா நிறுவனம், இந்திய மொபைல் சந்தையில் இரட்டை செல்பி கேமராவை பெற்ற சாம்சங் கேலக்ஸி A8+ (2018) ஸ்மார்ட்போன் ரூ.32,990 விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் அமேசான் தளத்தில் பிரத்தியேகமாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சாம்சங் கேலக்ஸி A8+ (2018)

கேலக்ஸி ஏ8 பிளஸ் கருவியில் மிக சிறப்பான சுய படங்களை பெறும் வகையில் 16 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் என இரட்டை பிரிவு சென்சார்களை பெற்ற கேமரா வழங்கப்பட்டுள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

6-இன்ச முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே கொண்டதாக வந்துள்ள இந்த மொபைல்போன் 1080×2220 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக கிடைக்கின்றது. பின்புறத்தில் செங்குத்தான கேமராவுடன் பக்கவாட்டில் எல்இடி ஃபிளாஷ் பெற்று பிளாக், ஆர்சிட் கிரே, கோல்டு மற்றும் புளூ உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

பிராசெஸர் & ரேம்

கேலக்ஸி ஏ8 பிளஸ் கருவி எக்சைனோஸ் 7885 பிராசெஸர் கொண்டு 6 ஜிபி ரேம் பெற்ற 64 ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் அதிகபட்சமாக 256 ஜிபி வரை நீட்டிக்கும் வகையிலான வசதி வழங்கப்பட்டுள்ளது.

கேமரா துறை

ஆண்ட்ராய்டு 7.1.1நௌக்கட் இயக்கப்படுகின்ற கேலக்ஸி ஏ8 பிளஸ் முன்ன்புறத்தில் 16 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு சிறப்பான செல்பி படங்களுடன் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். பின்புறத்தில் 16 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

3500mAh பேட்டரி கொண்டதாக சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன் இயக்கப்படுகின்றது.

மற்றவை

4ஜி எல்டிஇ,Wi-Fi 802.11ac, புளூடூத் v5.0, ஜிபிஎஸ்/ A-GPS, NFC, மற்றும் USB Type-C ஆகியவற்றை பெற்றுள்ளது.

விலை

அமேசான் இந்தியா இணையதளத்தின் வாயிலாக ஜனவரி 20, 2018 முதல் விற்பனைக்கு ரூ.32,990 விலையில் கேலக்ஸி ஏ8 பிளஸ் மொபைலை வாங்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here