சாம்சங் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் அறிமுகம் - Samsung Galaxy A80

ஸ்மார்ட்போன் சந்தையில் மற்றொரு புதிய வடிவத்தை சாம்சங் கேலக்ஸி ஏ80 (Samsung Galaxy A80) மாடலின் மூலம் சாம்சங் தொடங்கியுள்ளது. செல்ஃபி மற்றும் பிரைமரி பயன்பாட்டிற்கு ஒரே கேமரா அற்புதமான வசதியுடன் அறிமுகமாகியுள்ளது.

பாப் அப் முறையில் மேலே எழும்பி வந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கேமரா சென்சார் செல்ஃபி மற்றும் பிரைமரி பயன்பாட்டிற்கு தேவைக்கு ஏற்ப ரோட்டேட்டிங் முறையில் மாற்றிக் கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி A80 சிறப்புகள்

சாம்சங் நிறுவனம் இன்றைக்கு அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனினை புதிய சாகப்தத்தின் தொடக்கம் என சாம்சங் குறிப்பிடுகின்றது.  அதன்படி பாப் முறையில் மேலே எழும்பி வருகின்ற வகையில் இடம்பெற்றுள்ள கேமரா ஆனது செல்பி மற்றும் பிரைமரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் திரும்பிக் கொள்ளும் அம்சத்தை பெற்றுள்ளது.

6.7 அங்குல சூப்பர் AMOLED திரையை பெற்று 1,080 x 2,400 பிக்சல் தீர்மானத்துடன் வந்துள்ள இந்த போனை இயக்க குவால்காம் நிறுவனத்தின் புதிய ஏஐ சிப்செட் மாடலான ஸ்னாப்டிராகன் 730G பிராசெஸர் பெற்று 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்டுள்ளது.

கேமரா பிரிவில் இந்த போனில் 48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 3D டெப்த் ToF சென்சார் இடம்பெற்றுள்ளது. முன்புற செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பு தேவைகளையும் இதே கேமரா பூர்த்தி செய்யும். பயனர்கள் செல்பி படங்களை பிடிக்க வேண்டுமெனில் முன்புற கேமரா ஆப்ஷனை தேர்வு செய்தால் தானாகவே செல்பி சென்சார் கேமரா மேல் எழும்பி வந்து ரோட்டேட்டிங் விநாடிகளில் இந்த மெக்கானிக்கல் மாற்றம் நிகழும். 3700mAh திறன் பெற்ற பேட்டரி உடன் 25W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A80

Samsung Galaxy A80 specifications

 • 6.7 அங்குலம் (2400 x 1080 பிக்சல்) முழு HD+ 20: 9 New Infinity-U Super AMOLED display
 • Octa Core (2.2GHz Dual + 1.8GHz Hexa) ஸ்னாப்டிராகன் 730G பிராசெஸர்
 • 8GB RAM, 128GB சேமிப்பு வசதி
 • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் சாம்சங்  One UI
 • இரட்டை சிம்
 • 48MP front / rear cameras with LED flash with f/2.0 aperture, 8MP 123° ultra-wide angle camera with f/2.2 aperture, 3D Depth camera
 • இன்-டிஸ்பிளே கைரேகை செனசார்
 • Dolby Atmos
 • அளவுகள்: 165.2 x 76.5 x 9.3mm
 • Dual 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), Bluetooth 5, GPS + GLONASS, USB Type-C
 • 3700mAh பேட்டரி உடன் 25W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்