இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி A9

புதிய சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன்கள் இந்திய மார்க்கெட்டில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான தனித்துவமிக்க கேமரா செட்டப் குறித்த டீசர்கள் ஏற்கனவே இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் கோலாலம்பூரின் நடந்த விழாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன் குவாட்-கோர் செட்டப்களுடன் மாறுபடும் லென்ஸ்களுடன் வெளியானது. ரியார் கேமரா செட்டப்பில் அல்ட்ரா-அகலம் லென்ஸ்கள், டெலிபோட்டோ லென்ஸ், சாதாரன லென்ஸ் மற்றும் அழமான சென்சார்களுடன், சிங்கிள் LED பிளாஷ் பொருத்தப்பட்டிருந்தது.

இந்த சாம்சங் கேலக்ஸி A9 போன்கள் 39 ஆயிரம் ரூபாய் விலையில் இந்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு கேமரா செட்டப் மட்டுமின்றி, சாம்சங் கேலக்ஸி A9 போன்களில் 6.3 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்பிளேகளுடன் 18.9 அங்குல கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட் போன்கள் கோல்காம் ஸ்நாப்டிராகன் 660 சிப்செட்களுடன் ஆக்டோ-கோர் பிராசசர் கொண்டதாகவும், 3,800mAh அதிவேக சார்ஜிங் பேட்டரி கொண்டதாக இருக்கும்.

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி A9

சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன்கள் 6GB மற்றும் 8GB ரேம் வகையாக பல்வேறு நாடுகளில் வெளியானது. இந்தியாவிலும் இதே போன்று வெளியாகு என்று தெரிய வந்துள்ளது. இன்டர்னல் ஸ்டோர்ரேஜ் 128GB அளவிலும், எக்ஸ்டனர்ல் ஸ்டோர்ரேஜ் மைக்ரோ எஸ்டி கார்டு சபோர்ட் உடன் 512GB அளவு வரை விரிவு படுத்த முடியும். மேலும் இதில் ப்ளூடூத் 5.0, NFC மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் இடம் பெற்றுள்ளது. கூடுதலாக பிக்ஸ்பை விர்சுவல் அசிஸ்டெண்ட், சாம்சங் ஹெல்த் மற்றும் சாம்சங் பே போன்றவை இடம் பெற்றிருக்கும்.

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி A9

சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன்கள், கவிர் பிளாக், லெமனேட் ப்ளூ மற்றும் பபுள்கம் பிங்க் என மூன்று கலரில் வெளியாகும். சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.