samsung-galaxy-a90-render-video-shows

வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக உள்ள உயர் ரக சாம்சங் கேலக்ஸி A90 ஸ்மார்ட்போனில் மேலே எழும்பி வரும் ஸ்லைடர் முறையில் கேமரா பொருத்தப்பட்டு ஒரே கேமரா செல்பி மற்றும் பிரைமரி ஆப்ஷனாக இயங்கும் வகையில் செயல்படும் கான்செப்ட் படங்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் கேலக்ஸி A10, A20, A30 மற்றும் A50 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அடுத்து வெளியாக உள்ள ஏ90 கேமிங் அனுபவம் மற்றும் வித்தியசமான கேமரா பங்களிப்பினை கொண்டிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி A90 விபரம் கசிந்தது

சமீபத்தில் வெளியான நுட்பவிபரங்களின் அடிப்படையில் கேலக்ஸி ஏ90 போனில் உள்ள கேமரா சார்ந்த அமைப்பிற்கு என ஸ்லைடிங் முறையில் மேலே எழும்பி வரும் மெக்கானிஷம் வழங்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக ஸ்லைடிங் வகையில் கேமரா மேலே வந்து பிரைமரி ஆப்ஷனிலும், அதே சமயத்தில் அதே கேமரா திருப்பிக் கொள்ளும் வகையில் மாறி செல்ஃபி படங்களுக்கும் பயன்படுத்தப்படலாம் என கருதப்படுகின்றது.

6.7 அங்குல முழு HD+ (2400 x 1080 பிக்சல்ஸ்) OLED டிஸ்பிளே பெற்றிருப்பதுடன், இந்த போனை இயக்குவதற்கு என ஸ்னாப்டிராகன் 7150 சிப்செட் கொண்டிருக்கலாம். கேமரா பிரிவில் செஃபி மற்றும் வீடியோ கால் உட்பட பிரைமரி தேவைக்கும் ஒரே கேமரா பயன்படுத்தப்பட உள்ளது. இந்த கேமராவில் 48 எம்பி சென்சார், 8 எம்பி சென்சார் உட்பட டெலிபோட்டோ லென்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும் என விபரம் கசிந்துள்ளது.

இந்த மொபைல் இயங்குவது தொடர்பான வீடியோ ஒன்றை இங்கே காணலாம்.


மேலும் தொடர்ந்து சாம்சங் மொபைல் செய்திகள் மற்றும் ஸ்மார்ட்போன் செய்திகள்படிக்கலாம். எங்களுடைய ஃபேஸ்புக் மற்றும் ட்வீட்டர் பக்கங்களில் @gadgetstamilan இணைந்திருங்கள்..,