சீனாவில் புதிய சாம்சங் கேலக்ஸி சி8 மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் C8 ஸ்மார்ட்போன் நுட்பவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விலை விபரம் அறிவிக்கப்படவில்லை.
சாம்சங் கேலக்ஸி சி8 ஸ்மார்ட்போன்
சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஜே7 பிளஸ் மாடலையும் தொடர்ந்து இரட்டை கேமரா கொண்ட மொபைல் மாடலாக சி8 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருவிதமான ரேம் மாறுபாட்டில் கிடைக்க உள்ளது.
டிசைன் & டிஸ்பிளே
கோல்டு, கருப்பு, மற்றும் பிங்க் ஆகிய மூன்று நிறங்களை பெற்ற C8 5.5 அங்குல முழு உயர் தெளிவுத்திறன் திரையுடன், 1080×1920 பிக்சல் தீர்மானத்தை Super AMOLED டிஸ்பிளே கொண்டதாக வந்துள்ளது.
பிராசஸர் & ரேம்
கேலக்ஸி சி8 கருவியில் ஆக்டோ கோர் சிப்செட் பிராசஸர் கொண்டு இயக்கப்பட்டு 3ஜிபி மற்றும் 4ஜிபி என இரு ரேம் தேர்வுகளில் 3ஜிபி ரேம் மாடலில் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் மாடலில் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு திறனுடன் அதிகபட்சமாக 256GB வரை நீட்டிக்கும் திறன் கொண்டதாக உள்ளது.
கேமரா துறை
பின்புறத்தில் இரு பிரிவு கேமரா பெற்றுள்ள கேலக்ஸி சி8 ஸ்மார்ட்போனில் f/1.7 கொண்டதாக 13 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் பெற்றுள்ளது.
முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 16 மெகாபிக்சல் சென்சார் பெற்றுள்ளது.
பேட்டரி
ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பெற்ற கேலக்ஸி சி8 மொபைல் போனில் 3,000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.
மற்றவை
180 கிராம் எடை பெற்ற இந்த மொபைலில் வைஃபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை துனை விருப்பங்களாக பெற்றுள்ளது.
விலை
சீனா சாம்சங் அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் கேலக்ஸி சி8 வெளியிடப்பட்டுள்ள விபரங்களில் விலை பற்றி குறிப்பிடப்படவில்லை.