சாம்சங் கேலக்ஸி F41 மொபைல் அறிமுக விபரம்

வரும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு புதிய சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன் (#Fullon) விற்பனைக்கு வெளியாக உள்ளது. பிரத்தியேகமாக புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்றதாக விளங்கும் என தனது டீசரில் குறிப்பிட்டுள்ளது.

கேமராவுக்கு என பிரத்தியேகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ள கேலக்‌ஸி F சீரிஸ் பட்ஜெட் விலைக்குள் அமைந்திருக்கும். ஃபிளிப்கார்ட் இ-காமர்ஸ் தளம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப்41

1,080 x 2,340 பிக்சல் தீர்மானத்துடன் கூடிய 6.4 அங்குல FHD+  sAMOLED ஸ்கீரின் பெற்றிருக்கும். முன்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே கொண்டு செல்ஃபி கேமராவுடன், பின்புறத்தில் டிரிப்ள் கேமரா செட்டப் கொண்டிருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி F41 மொபைல் பிரைமரி கேமரா ஆப்ஷனில் 64 எம்பி சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் மற்றும் டெப்த் அல்லது மேக்ரோ சென்சார் இடம்பெற்றிருக்கும். முன்புறத்தில் 32 எம்பி கேமரா செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்படுத்தலாம்.

15 வாட்ஸ் விரைவு சார்ஜருடன் 6000mAh பேட்டரியுடன் 4G LTE, டூயல் பேண்டு வை-ஃபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவை அமைந்துள்ளது.