சாம்சங் கேலக்ஸி F41 மொபைல் விலை மற்றும் சிறப்புகள்

ரூ.16,999 விலையில் வெளியிடப்பட்டுள்ள புதிய சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போனில் 64 எம்பி பிரைமரி சென்சாருடன் கூடிய 6,000 எம்ஏஎச் பேட்டரி பெற்று 6 ஜிபி ரேம் கொண்டதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 16 ஆம் தேதி துவங்குகின்ற பிக் பில்லியன் நாட்களில் ஃபிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப்41

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி F41 மாடல் 6.4 அங்குல (2340 x 1080 பிக்சல்கள்) முழு எச்டி + இன்ஃபினிட்டி யு சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே 420 நைட்ஸ் பிரகாசத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மொபைலை இயக்குவதற்கு ஆக்டா-கோர் (குவாட் 2.3GHz + குவாட் 1.7GHz) மாலி-ஜி 72 எம்.பி 3 ஜி.பீ.யுடன் எக்ஸினோஸ் 9611 10 என்எம் சிப்செட் கொடுக்கபட்டு 6 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரு விதமான சேமிப்புடன் 512 ஜிபி வரை விரிவுப்படுத்தக்கூடிய மைக்ரோ எஸ்டி ஸ்லாட் உள்ளது.

கேமராவை பொறுத்தவரை 64 எம்பி சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் மற்றும் 5 எம்பி டெப்த் சென்சார் இடம்பெற்றிக்கின்றது. முன்புறத்தில் 32 எம்பி கேமரா செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்படுத்தலாம்.

கேலக்ஸி F41 போனில் சிங்கிள் டேக் அம்சத்துடன் வருகிறது, இது 7 புகைப்படங்கள் மற்றும் 3 வீடியோக்களை 10 விநாடிகள் வரை தட்டுவதன் மூலம் எடுக்கும். தொலைபேசியில் டூயல்-டோன் பூச்சு கொண்ட பிளாஸ்டிக் உடல் உள்ளது. பிரத்யேக இரட்டை சிம், யூ.எஸ்.பி டைப்-சி வழியாக 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி F41 ஃப்யூஷன் கிரீன், ஃப்யூஷன் பிளாக் மற்றும் ஃப்யூஷன் ப்ளூ வண்ணங்களில் வருகிறது.

6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ்  -ரூ.16,999

6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ்  -ரூ.17,999

சாம்சங் கேலக்ஸி F41 மொபைல் விலை மற்றும் சிறப்புகள்

web title : Samsung Galaxy F41 mobile 64MP triple rear cameras, 6000mAh battery launched in India starting at Rs. 16999