galaxy fold

இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள மடிக்ககூடிய திரை பெற்ற சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.1.64 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக கார்பன் ஃபைபர் கேஸ், கேலக்ஸி வயர்லெஸ் இயர் பட்ஸ், மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டிருக்கின்றது.

ஃபோல்டு மாடலில் 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு கொண்டு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்பட்டு அக்டோபர் 20 ஆம் தேதி முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது.

Samsung Galaxy Fold ஸ்மார்ட்போனின் வசதிகள்

7.3 அங்குல QXGA+ இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டைனமிக் AMOLED 1536×2152 பிக்சல்ஸ் டிஸ்பிளேவாக விரிவடைகிறது. அதனை தொடர்து மொபைலை மடக்கிய நிலையில் பயன்படுத்த 4.7 அங்குல சூப்பர் AMOLED கொண்டு 840×1960 பிக்சல்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

7nm குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் என குறிப்பிடப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஃபோல்டில் 12 ஜிபி ரேம் உடன் 512 ஜிபி சேமிப்பை கொண்டு கூடுதலாக விரிவாக்க எஸ்டி கார்டு வழங்கப்படவில்லை. இந்த மொபைல் போனில் மொத்தமாக 6 கேமரா சென்சார்கள் இணைக்கபட்டுள்ளது.

விரைவில்., ரூ.1.50 லட்சத்தில் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு இந்தியாவில் அறிமுகம் 1

பின்புறத்தில் மூன்று கேமராக்களை பெற்றுள்ளது. அதாவது அதாவது 12-megapixel f/2.4 கொண்ட டெலிபோட்டோ லென்ஸ், 12-megapixel f/1.5 டுயல் அப்ரேச்சர் கொண்ட OIS ஆதரவு மற்றும் 16-megapixel f/2.2 அல்ட்ரா வைட் கேமரா சென்சார் பெற்றதாக அமைந்துள்ளது.

முழுமையான 7.3 அங்குல திரை சமயத்தில் 10MP செல்ஃபி F2.2 மற்றும் வீடியோ காலிங் கேமரா உடன் கொண்டதாக அமைந்துள்ளது. மடித்த நிலையில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு 10MP செல்ஃபி F2.2 மற்றும் 8 MP RGB கேமரா சென்சார் பெற்றதாக உள்ளது.  இரண்டு பேட்டரிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற ஆதரவுடன் 4,380mAh பேட்டரியை கொண்டதாக அமைந்துள்ளது.