சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு (Samsung Galaxy Fold) விற்பனைக்கு வெளியிடப்படும் என சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுனத்தின் ஐ.டி மற்றும் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் மற்றும் சிஇஓ டி.ஜே. கோ உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும்போது மடிக்கும் வகையிலான கேலக்ஸி ஃபோல்டு வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து டி.ஜே. கோ கூறுகையில் ” இந்திய சந்தையானது, மிக முக்கியமான சந்தை ஆக விளங்குகின்றது. முதலீடுக்கு மட்டுமல்ல எல்லாவற்றிக்கும், சாம்சங்கின் நீண்ட கால அடிப்படையில், இந்திய சந்தையில், எமது புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை நாங்கள் ஏன் விடுவிக்க மாட்டோம் ? ஆம், நிச்சியமாக அறிமுகம் செய்வோம், ” என  குறிப்பிட்டுள்ளார்.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் போது கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என டி.ஜே. கோ தெரிவித்தார்.

Samsung Galaxy Fold ஸ்மார்ட்போனின் வசதிகள்

7.3 அங்குல QXGA+ இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டைனமிக் AMOLED 1536×2152 பிக்சல்ஸ் டிஸ்பிளேவாக விரிவடைகிறது. அதனை தொடர்து மொபைலை மடக்கிய நிலையில் பயன்படுத்த 4.7 அங்குல சூப்பர் AMOLED கொண்டு 840×1960 பிக்சல்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

7nm குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் என குறிப்பிடப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஃபோல்டில் 12 ஜிபி ரேம் உடன் 512 ஜிபி சேமிப்பை கொண்டு கூடுதலாக விரிவாக்க எஸ்டி கார்டு வழங்கப்படவில்லை. இந்த மொபைல் போனில் மொத்தமாக 6 கேமரா சென்சார்கள் இணைக்கபட்டுள்ளது.

பின்புறத்தில் மூன்று கேமராக்களை பெற்றுள்ளது. அதாவது அதாவது 12-megapixel f/2.4 கொண்ட டெலிபோட்டோ லென்ஸ், 12-megapixel f/1.5 டுயல் அப்ரேச்சர் கொண்ட OIS ஆதரவு மற்றும் 16-megapixel f/2.2 அல்ட்ரா வைட் கேமரா சென்சார் பெற்றதாக அமைந்துள்ளது.

முழுமையான 7.3 அங்குல திரை சமயத்தில் 10MP செல்ஃபி F2.2 மற்றும் வீடியோ காலிங் கேமரா உடன் கொண்டதாக அமைந்துள்ளது. மடித்த நிலையில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு 10MP செல்ஃபி F2.2 மற்றும் 8 MP RGB கேமரா சென்சார் பெற்றதாக உள்ளது.  இரண்டு பேட்டரிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற ஆதரவுடன் 4,380mAh பேட்டரியை கொண்டதாக அமைந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் விலை $1980 (ரூ. 1,41,300) ஆகும். இந்த போனில் பச்சை, நீலம், சில்வர் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்க உள்ளது. 4ஜி எல்டிஇ மற்றும் 5ஜி ஆதரவை கொண்டதாக விளங்கும். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஏப்ரல் 26ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.